அச்சத்தை ஏற்படுத்திய மோடியின் பிரச்சாரம்.. ஜி-க்கு எதிராக திரும்பிய உலக நாடுகள்

modi-latest
modi-latest

Narendra Modi: தற்போது பிரதமர் இரண்டாம் கட்ட தேர்தலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதுவே அவருக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் பிரச்சாரத்தில் அவர் காங்கிரஸ் பற்றி ஒரு கருத்தை கூறியிருந்தார். அக்கட்சி இஸ்லாமியர்களுக்கு நாட்டின் சொத்தை கொடுக்கின்றனர்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். அதனால் இந்துக்களின் சொத்து அவர்களுக்கு போகிறது என பேசி இருந்தார். இது கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பிரச்சனையாகவும் வெடித்தது.

மோடியின் சர்ச்சை பேச்சு

இதற்கு ராகுல் காந்தி, மு க ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் இது மத உணர்வுகளை தூண்டி பிரிவினையை ஏற்படுத்தும் எனவும் கூறியிருந்தனர்.

அதேபோல் அனைத்து ஊடகங்களும் தங்கள் எதிர்ப்புகளை நேரடியாகவே முன்வைத்தது. அது மட்டுமல்லாமல் உலக நாடுகள் கூட அவருடைய பேச்சால் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அதனாலயே இப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்த எம்பிக்கள் மோடிக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். ஒரு பிரதமருக்கு வெளிநாட்டில் இருந்து இந்த அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியது இதுவே முதல் முறையாகும்.

உலக நாடுகளின் எதிர்ப்பு

மேலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் கூட பிரதமரின் பேச்சு சர்ச்சை செய்தியாக வெளியாகி உள்ளது. இப்படி மோடிக்கு எதிராக கடும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

இதை மூத்த பத்திரிகையாளர் மணி வெளிப்படையாக கூறியுள்ளார். மோடியால் தங்கள் கட்சியின் சாதனை உள்ளிட்டவற்றை பேச முடியவில்லை.

அதனால் இப்படி பேசி மத உணர்வை தூண்டி விடுகிறார் என அவர் கூறியுள்ளார். அது மட்டுமின்றி இது பெரும் சிக்கலை கொடுத்து விடுமோ என்ற அச்சம் கூட ஏற்பட்டுள்ளது.

Advertisement Amazon Prime Banner