நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்களில் டாப் ஹீரோவாக இருப்பவர். இவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என ரசிகர்கள் அதிகம். இவர் முதன்முதலில் ஒரு காமெடியனாகவே தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். இன்று கோலிவுட்டின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.
ஆரம்பகாலங்களில் இவருடைய கடின உழைப்பும், அதிர்ஷ்டமும் சேர்ந்து இவரை நம்பர் ஒன் ஹீரோவாக ஆக்கின. மான் கராத்தே, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரெமோ, வேலைக்காரன் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்த இவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
Also Read: பேராசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன்.. இப்போ என்ன பண்ணாலும் அடி நிச்சயம்
ஆனால் சிவகார்த்திகேயனுக்கு இது போறாத காலமாகவே இருக்கிறது. கடந்த தீபாவளியன்று இவர் நடித்த பிரின்ஸ் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தின் மேல் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
அந்த நம்பிக்கைக்கு காரணம் அவருடைய முந்தைய படங்கள் தான். நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர், டான் என இவருடைய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. மேலும் டான் படத்தின் தாக்கம் அப்போது ரசிகர்களிடையே அதிகமாக இருந்ததால் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருந்தது.
Also Read: தமிழ் சினிமாவில் யாரும் புரியாத சாதனை.. சிவகார்த்திகேயனின் புது அவதாரம்
ஆனால் பிரின்ஸ் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மிகப்பெரிய அடியாகவே அமைந்தது. சிவகார்த்திகேயன் இதுவரை சந்தித்திராத தோல்வியை இந்த படத்தின் மூலம் சந்தித்தார். இப்போது இன்னும் கொடுமையாக பிரின்ஸ் திரைப்படத்திற்காக சிவா வாங்கிய சம்பளத்தை திரும்ப தருமாறு தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
இந்த மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டாலும், இப்படி ஒரு சம்பவம் நடப்பது என்பது சிவாவின் சினிமா கேரியருக்கு பிரச்சனையாகவே அமையும். கோலிவுட்டின் டாப் ஹீரோ என இவரை சொல்லிக்கொண்டாலும் ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் இவர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இதை பல நேரங்களில் சிவா பொது மேடையிலேயே சொல்லியிருக்கிறார்.
Also Read: தெலுங்கு சினிமா போனாலும் சிவகார்த்திகேயனை சுத்தி சுத்தி அடிக்கும் பிரச்சனை.. யார் செய்த சதியோ