தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான படம் பிரின்ஸ். இப்படத்தில் மரியா, சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கார்த்தியின் சர்தார் படத்திற்கு போட்டியாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
ஆனால் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி படம் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read : கையும் களவுமாக மாட்டிக் கொண்ட தளபதி விஜய்.. சிவகார்த்திகேயன் பாடலை காப்பி அடித்து சிக்கிய ‘ரஞ்சிதமே’
ஏனென்றால் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இவ்வாறு ஒரு மோசமான தோல்வியை எந்த படமும் சந்தித்ததில்லை. இந்த படத்துடன் வெளியான சர்தார் படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து டாக்டர், டான் என வெற்றி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய சருக்களை பிரின்ஸ் படம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த தோல்விக்கு காரணம் யார் என்பதை தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு விழாவில் கூறி உள்ளார். அதாவது குருமூர்த்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட கே ராஜன் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பிரின்ஸ் பட தோல்விக்கு அவர் காரணம் இல்லை.
Also Read :விலை போகாத படங்களை நேக்காக தள்ளிவிடும் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் படத்தில் பலிக்காமல் போன பாட்சா
அதாவது இயக்குனர் கதையில் கவனம் செலுத்தாதது மற்றும் படத்தின் மேக்கிங் சரி இல்லாத காரணத்தினால் தான் படம் தோல்வியானது. மேலும் பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு இயக்குனரும், அதற்கு செலவு செய்த தயாரிப்பாளரும் தான் காரணம் என கே ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு படம் தோல்வியடைவதற்கு படக்குழுவில் உள்ள எல்லோருமே காரணம் தான். ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்று தான் தயாரிப்பாளர், இயக்குனர் நடிகர், நடிகைகள் என எல்லோருமே வேலை செய்கிறார்கள். ஆனால் எதிர்பாராத அளவு படம் தோல்வி அடைந்தால் அதற்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்வது தவறு என பலரும் கூறி வருகிறார்கள்.
Also Read :சிவகார்த்திகேயனிடம் தூக்கியது போல பிரபல சேனலை வாங்கிய உதயநிதி.. எதையும் விட்டு வைப்பதா இல்ல!