Aadujeevitham : கடந்த 2008 ஆம் ஆண்டு கோட் டேஸ் என்ற நாவலை எழுத்தாளர் பென்யாமின் எழுதி இருந்தார். இதை 2010 ஆம் ஆண்டு பிருத்விராஜ் மற்றும் பிளெஸ்ஸி இருவரும் படமாக்க நினைத்தனர். ஆனால் 16 வருடங்களுக்குப் பிறகு தான் அது சாத்தியமாகி உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
இந்த வகையில் பிருத்விராஜின் அசாத்தியமான நடிப்பில் ஆடுஜீவிதம் படம் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் விக்ரம் தன்னை வருத்திக் கொண்டு எப்படி நடிப்பாரோ அதையே மிஞ்சும் அளவிற்கு ஆடுஜீவிதம் படத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார்.
பிருத்விராஜின் சிறந்த நடிப்பின் மூலம் அவரது வழியை நேரடியாக ரசிகர்களை இணைத்து இருக்கிறது. சிறந்த முதல் நாள் பாதி மற்றும் நல்ல இரண்டாம் பாதியும் அமைந்துள்ளது. இயக்குனர் பிளெஸ்ஸிக்கு மகத்தான பாராட்டு.
ஆடுஜீவிதம் படத்தில் இசை மற்றும் காட்சிகள் அனைத்துமே பிரமாதம். மொத்தத்தில் கமர்ஷியல் பார்வையாளர்களுக்கு அல்ல, கலை திரைப்பட ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
சினிமாவின் மாஸ்டர் பீஸ் படமாக ஆடுஜிவிதம் இருக்கும். பிருத்வி மற்றும் பிஸெஸ்ஸி கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டும். 16 வருட உழைப்பு மற்றும் டெடிகேஷன் கிடைத்த வெற்றி. படத்தின் இரண்டாம் பாதி பயங்கரமாக உள்ளதாக கூறியுள்ளனர்.