செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால்.. ப்ரோ டாடி எப்படி இருக்கு.? ட்விட்டரில் வெளிவந்த விமர்சனங்கள்

லூசிபர் என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரபல நடிகர் பிருத்விராஜ். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் மோகன்லாலை வைத்து பிருத்விராஜ் இயக்கியுள்ள படம் தான் ப்ரோ டாடி.

மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள ப்ரோ டாடி படம் இன்று அதாவது ஜனவரி 26 டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கருத்து என்ன என்பதை பார்க்கலாம்.

bro-daddy-movie-review
bro-daddy-movie-review

இரண்டாவது முறையாக பிருத்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணி அமைத்துள்ள ப்ரோ டாடி படம் முழுக்க முழுக்க பேமிலி எண்டர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் அளவிற்கு படத்தின் கதையை அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பிருத்விராஜ்.

bro-daddy-movie-review
bro-daddy-movie-review

கதைப்படி மோகன்லால் மற்றும் அவரின் மனைவி மீனா ஆகிய இருவரும் தங்களின் ஒரே ஒரு மகனான பிருத்விராஜுக்கு அவர்களின் நீண்டகால குடும்ப நண்பர்களான மகளான கல்யாணி பிரியதர்ஷனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.

bro-daddy-movie-review
bro-daddy-movie-review

இதற்கிடையில் அவர்கள் குடும்பத்தில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்க அதை எப்படி சமாளிக்கிறார்கள். இறுதியில் அந்த திருமணத்தை நடத்தினார்கள் என்பதை காமெடி கலந்து அனைவரும் ரசிக்கும்படி உருவாக்கியிருக்கிறார்கள். தற்போது வரை டிவிட்டர் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் படத்திற்கு பாசிடிவ் கமெண்ட்களே கிடைத்து வருகிறது.

bro-daddy-movie-review
bro-daddy-movie-review

அதன்படி பிருத்விராஜ் மீண்டும் ஒருமுறை தன்னை சிறந்த இயக்குனராக நிரூபித்து விட்டார். மோகன்லால் பிருத்விராஜ் காம்போ சிறப்பாக உள்ளது. ஒரு நல்ல சிறந்த காமெடி படம் என்பது போன்ற கமெண்ட்களை தான் தற்போது வரை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News