மலையாளம், தமிழ் மொழிகளிலும் சிறந்த நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் இருந்து வருகிறார். மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த நந்தனம் திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கனா கண்டேன் திரைப்படத்தில் அழகிய வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து பாரிஜாதம், மொழி , நினைத்தாலே இனிக்கும், ராவணன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுவரை 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ஆகஸ்ட் சினிமா என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் வைத்துள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் உறுமி, இந்திய ரூபாய் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதை எடுத்து இயக்குனராகவும் மாறியுள்ளார்.
2019ஆம் ஆண்டு லூசிபர் என்ற திரைப்படத்தை மோகன்லாலை வைத்து இயக்கி இருந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே 200 கோடி வசூலை பெற்று, அதிக வசூல் செய்த திரைப்படங்கள் வரிசையில் லூசிபர் திரைப்படமும் இடம்பெற்றது.
அதைத்தொடர்ந்து லூசிஃபர் 2 எடுக்க முடிவு செய்திருந்தார். அதற்கு முன் மோகன்லாலுடன் இணைந்து போராடி என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படத்தின் மூலம் மிகவும் மகிழ்ச்சி அடைந்த மோகன்லால் -பிரித்திவிராஜ் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடைய கூலிங்கிளாஸ் ஒன்றை வாங்கி பரிசாக கொடுத்துள்ளார் மோகன்லால்.
இதனால் பெருமகிழ்ச்சி அடைந்த பிரித்திவி தன்னுடைய இணையதள பக்கத்தில் கூலிங்கிளாஸ் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.