வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

10 வருடத்திற்கு முன்பே பிரித்விராஜ் படத்தில் மேஜர் முகுந்த்.. அட! இத நோட் பண்ணாம விட்டுட்டோமே

Amaran: அமரன் என்றால் மரணமே இல்லாதவன் என்ற அர்த்தம் இருக்கிறது. அப்படி ஒரு பாக்கியம் தான் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைத்திருக்கிறது. அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் ஒரு பேட்டியில் நான் என் கணவரை மீண்டும் இந்த உலகத்திற்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் இந்த படம் எடுக்க சம்மதித்தேன் என்று சொல்லி இருந்தார்.

அவருடைய எண்ணம் நூறு சதவீதம் பூர்த்தி அடைந்து விட்டது. அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்திற்கு பிறகு எந்த பக்கம் திரும்பினாலும் மேஜர் முகுந்த் பற்றிய பேச்சு தான். இணையதளம் பக்கம் போனாலே அவர் சம்பந்தப்பட்ட செய்திகள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

பிரித்விராஜ் படத்தில் மேஜர் முகுந்த்

மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று, அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையேயான காதல் தான் இன்று வரை சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாதிகள் மீதான துப்பாக்கி குண்டு சூட்டில் மரணம் அடைந்த முகுந்த் பற்றி நாம் 2024 ஆம் ஆண்டு படம் எடுத்திருக்கிறோம்.

ஆனால் அவர் இறந்த அடுத்த வருடமே மலையாள படத்தில் அவரைப் பற்றி பேசி இருக்கிறார்கள். பிரித்விராஜ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு ரிலீசான பிக்கெட் 43 படத்தில் தான் இது நடந்திருக்கிறது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்திருக்கும் பிரித்விராஜ் இன்னொரு ராணுவ வீரருடன் போனில் பேசுகிறார்.

அப்போது அந்த ராணுவ வீரர் பிரித்விராஜிடம் இங்கு மூன்று பேர் இறந்து விட்டார்கள். அதில் மேஜர் முகுந்த் சார் கூட ஒருவர் என்று சொல்கிறார். அதற்கு பிரித்விராஜ் என்ன முகுந்த் சார் இறந்துவிட்டாரா, அவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறதே என கவலையோடு சொல்கிறார்.

அதற்கு அந்த ராணுவ வீரர் என்ன செய்வது நம்முடைய நிலைமை இப்படித்தான் என்று சொல்கிறார். தற்போது அமரன் படம் ரிலீசுக்கு பிறகு இந்த காற்று இணையதளத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

Trending News