சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Prithviraj: மலையாள சினிமாவை புரட்டிப் போடும் பிரித்திவிராஜின் 6 டாப் வசூல் படங்கள்.. மிஸ் பண்ணாம பாருங்க!

Prithviraj Best Movies: சமீபத்தில் வெளிவந்த படங்களில் மலையாள படங்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுவும் சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய அளவில் கொண்டாடும் அளவிற்கு வசூலில் லாபத்தை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவை புரட்டிப் போடும் அளவிற்கு பிரித்விராஜின் படங்கள் வசூல் அளவில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

இந்த படங்களை எல்லாம் எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படமாக தான் அமைந்திருக்கிறது. அப்படி சமீபத்தில் வெளிவந்த பிரதிவிராஜின் படங்களில் ஒரு நாள் வசூல் மற்றும் மொத்த லாபத்தை எவ்வளவு பெற்று இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

வசூல் மன்னனாக ஜொலித்து வரும் பிரிதிவிராஜ்

ஆடு ஜீவிதம்: பிளஸ்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் நடிப்பில் தி கோட் லைஃப் ஆடு ஜீவிதம் இரண்டு மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இப்படத்தில் பிரித்விராஜ் நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி முதல் நாளிலே 5.83 கொடி லாபத்தை பெற்று இருக்கிறது. 82 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் மொத்தமாக 158.15 கோடி வசூலை அடைந்திருக்கிறது.

சலார்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பிரபாஸ் மற்றும் பிரதிவிராஜ் நடிப்பில் சலார் படம் வெளிவந்தது. இப்படம் கிட்டத்தட்ட 270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு முதல் நாள் வசூலாக 4.65 கோடி லாபத்தை பெற்றது. அடுத்து மொத்தமாக 705 கோடி முதல் 715 கோடி லாபத்தை பெற்றிருக்கிறது.

குருவாயூர் ஆம்பளநடையில்: விபின் தாஸ் இயக்கத்தில் நேற்று குருவாயூர் ஆம்பளநடையில் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது திருமணத்தை சுற்றியுள்ள நிகழ்வுகளையும், வேடிக்கை மற்றும் சண்டைகளை மையப்படுத்தி படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படம் வெளிவந்த முதல் நாளிலேயே 3.80 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

கடுவா: ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் நடிப்பில் கடுவா ஆக்சன் திரைப்படமாக வெளிவந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் வசூலாக 3.11 கோடி லாபத்தை பெற்று மொத்தமாக 46.5 கோடி வசூலை அடைந்திருக்கிறது.

ஜன கன மன: டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் ஜன கன மன திரைப்படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மொத்தமாக 50.8 கோடி வசூலை அடைந்திருக்கிறது.

அமர் அக்பர் அந்தோணி: நாதிர்ஷா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு அமர் அக்பர் அந்தோணி ஒரு நகைச்சுவை திரில்லர் படமாக வெளிவந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய லாபத்தை கொடுத்து இருக்கிறது. மொத்தமாக 50 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

இப்படி பிரிதிவிராஜ் நடிப்பில் வெளிவந்த பல படங்களில் இப்படங்கள் அதிக வசூலை கொடுத்து மிஸ் பண்ணாமல் பார்க்கக்கூடிய படமாக பெயர் எடுத்து இருக்கிறது.

Trending News