ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நடிகர் கொடுத்த அந்தரங்க டார்ச்சர்.. குஷ்பூ சொன்னது இந்த ஹீரோவையா.?

Kushboo: திரையுலகில் அந்தரங்க டார்ச்சர் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. நடிகைகள் சிலருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் அதற்கு சம்மதிக்கின்றனர்.

சில நடிகைகள் அப்படி ஒரு வாய்ப்பு தேவை இல்லை என உதறி விடுகின்றனர். சிலர் முன்பு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகளை தற்போது மீ டூ என்ற பெயரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்படித்தான் சமீபத்தில் குஷ்பூ தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். அதில் அவர் பிரபல நடிகர் ஒருவர் என்னிடம் தவறான முறையில் நெருங்க முயற்சி செய்தார்.

உடனே நான் என்னுடைய செருப்பு சைஸை சொன்னேன். அதன் பிறகு அவர் என்னை தொந்தரவு செய்யவில்லை என குறிப்பிட்டு இருந்தார். உடனே சில சேனல்கள் குஷ்பூ விஜய் பற்றி தான் மறைமுகமாக சொல்லி இருக்கிறார் என கொளுத்திப் போட்டு விட்டனர்.

குஷ்பூவை டார்ச்சர் செய்த ஹீரோ

ஏனென்றால் வாரிசு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோவை அவர் பகிர்ந்திருந்தார். ஆனால் படத்தில் பார்த்தால் குஷ்பூ நடிக்கவில்லை. ஏதோ பிரச்சனையால் தான் அவர் விலகி இருப்பார் என அப்போதே பேசப்பட்டது.

தற்போது இரண்டையும் முடிச்சு போட்டு செய்திகள் பரவ தொடங்கிவிட்டது. அதேபோல் சிம்பு கூட அவரிடம் வாலாட்டி இருக்கலாம் என்றும் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. உண்மையில் இது இரண்டுமே உண்மை கிடையாது.

தேவையில்லாத வதந்தியை சில விஷமிகள் பரப்பி வருகின்றனர். ஏனென்றால் குஷ்பூ பலமுறை விஜய் தன்னுடைய தம்பி என வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதே போல் சிம்புவும் குஷ்பூவுக்கு மகன் என்ற வயதில் தான் இருக்கிறார். அதனால் இதில் துளி அளவு கூட உண்மை கிடையாது. ஆனால் பல விஷயங்களை தைரியமாக பேசும் குஷ்பூ அந்த நடிகர் பெயரை சொல்லாதது ஏனோ தெரியவில்லை.

அதனால்தான் இவ்வளவு சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது. அவர் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என வலைப்பேச்சு பிஸ்மி ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Trending News