சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சிம்புக்கு சப்போர்ட் பண்ணிய சேனல், அந்தர் பல்டி அடித்த STR.. எவனையும் நம்பி எதையும் பேசக்கூடாது

நடிகர் சிம்பு பல நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து, இப்போது அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். மாநாடு வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் ரிலீஸ் ஆன வெந்து தணிந்தது காடு படமும் எதிர்பாரா அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இப்போது சிம்பு பத்துதல படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

சிம்புவுக்கு மிகப்பெரிய நெகட்டிவ் என்றால் அது அவர் சில இடங்களில் பேசும் பேச்சுக்கள் தான். அவர் சாதாரணமாக பேசும் பேச்சுக்களை கூட கான்ட்ரவர்சியலாக மாற்றி விடுவார்கள். ஆனால் இப்போது ஒரு மிகப்பெரிய கான்ட்ராவர்சியலான விஷயத்திலேயே STR வசமாக சிக்கி இருக்கிறார்.

Also Read: மணிரத்தினத்தின் மொத்த வசூல் டார்கெட்டும் இதுதான்.. பான் இந்தியா ரிலீஸ் எல்லாம் சும்மா கண் துடைப்பு

கோலிவுட்டின் கனவு படமான பொன்னியின்செல்வன் அறிவிப்பை மணிரத்தினம் சொன்னதிலிருந்தே, எந்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற ஆர்வம் தமிழ் ரசிகர்களிடையே அதிகமாகி விட்டது. கேரக்டர்கள் உறுதியான பின்னும் அவ்வப்போது இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என கருத்துக்கள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தளபதி விஜயை நடிக்க வைக்க மணிரத்தினம் ஆசைப்பட்டதாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ஒரு தகவலில், பொன்னியின் செல்வனில் நடிகர் சிம்புவை நடிக்க வைக்க மணிரத்தினம் ஆசைப்பட்டதாகவும், ஆனால் கார்த்தியும் , ஜெயம் ரவியும் சிம்பு நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம் என மணிரத்தினத்தை மிரட்டியதாகவும் STR இதை போன் பண்ணி சொல்லியதாகவும் ஒரு யூடியூப் சேனல் சொல்லியிருக்கிறது.

Also Read: கூல் சுரேஷ் வாழ்க்கை இனி என் கையில்.. கூவுனதுக்கு சிம்பு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்

இதை பற்றி பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனில் இருந்த ஜெயம் ரவியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரவி இந்த செய்தி குறித்து சிம்புவிடம் தான் பேசியதாகவும், சிம்பு இப்படி ஒரு தகவலை நான் எந்த சேனலுக்கு சொல்லவில்லை என்றும் உண்மையில் நான் அந்த படத்தில் நடித்தால் நீ தான் முதலில் சந்தோசப்பட்டு இருப்பாய் என்று சொல்லியதாகவும் கூறியிருக்கிறார்.

இப்போது அந்த யூடியூப் சேனல் தரப்பு, மாநாடு திரைப்படத்தின் போது சிம்புவிடம் பொன்னியின் செல்வனில் நீங்கள் நடிக்கவில்லையா என்று கேட்டதற்கு மணிரத்தினம் மனதில் தான் இருந்ததாகவும் ஜெயம் ரவியும், கார்த்தியும் தான் இயக்குனரை மிரட்டியதாகவும் கூறினார். அதை தான் நாங்கள் இப்போது வெளியில் சொன்னதாகவும் சினிமாவில் யாரை நம்பி என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றும் புலம்பி இருக்கிறது.

Also Read: உண்மையைச் போன் போட்டு சொன்ன சிம்பு.. மணிரத்னத்தை மிரட்டிய ஜெயம் ரவி, விக்ரம்

Trending News