திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அந்தரங்க கேள்வி கேட்ட நெட்டிசன்.. செருப்படி பதில் கொடுத்த பிரியா பவானி

Actress Priy bhavani Sankar: நடிகைகள் என்றால் பப்ளிக் ப்ராப்பர்ட்டி என்று நினைப்பு சிலருக்கு இருக்கிறது. அதனாலயே ரசிகர்கள் பலரும் கேட்க கூடாத கேள்விகளை எல்லாம் ஹீரோயின்களை பார்த்து கேட்கின்றனர். அப்படி ப்ரியா பவானி சங்கரை பார்த்து மோசமான ஒரு கேள்வி கேட்ட நெட்டிசனை அவர் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் அனைவரும் ஒரு நாளின் பாதி பகுதியை இதில் தான் கழித்து வருகின்றனர். அதில் பிரபலங்களுடன் உரையாடுவது, அவர்களிடம் கேள்வி கேட்பது ஆகியவற்றிலும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Also read: SJ சூர்யா போர் அடித்ததால் கருநாகத்துடன் இணையும் பிரியா பவானி.. சுட சுட வெளியான அப்டேட்

அந்த வகையில் சமீபத்தில் ப்ரியா பவானி சங்கர் ரசிகர்களின் கேள்விக்கு சோசியல் மீடியாவில் பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் உங்கள் உள்ளாடையின் சைஸ் என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு பிரியா பவானி சங்கர் கொடுத்த பதில் தான் நெத்தியடியாக இருந்தது.

அதாவது அவர் சகோதரரே எனக்கு 34டி சைஸ் தான். என்னிடம் இருக்கும் அங்கங்கள் போல் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் இருக்கிறது. நான் இதை வேற்று கிரகத்திலிருந்து பெறவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் அணிந்துள்ள ஆடையை ஜூம் செய்து பார்த்தால் சைஸ் தெரியும்.

Also read: சினிமாவிலும் ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு.. பதற வைக்கும் பேட்டியை அளித்த பிரியா பவானி

அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதில் அளித்துள்ளார். அவருடைய இந்த பதிலடி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. நடிகை தானே என்ற எண்ணத்தில் இது போன்ற வக்கிரம் பிடித்த கேள்விகளை கேட்கும் நபர்களுக்கு இப்படித்தான் பதிலளிக்க வேண்டும் என்று பிரியா பவானி சங்கரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இவர் மட்டுமல்லாமல் தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பல ஹீரோயின்களுக்கும் இது போன்ற கமெண்ட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சிலர் அதை கண்டும் காணாமல் சென்று விடுகின்றனர். ஆனால் சில நடிகைகள் இதுபோன்ற செருப்படி பதில்களை கொடுத்து சம்பந்தப்பட்டவர்களை மூக்குடைய வைத்து விடுகின்றனர்.

Also read: சிம்ரன், த்ரிஷாவுக்கு அப்புறம் நீங்க தான் டாப்பு.. 50 வயதிலும் பிரியா பவானிக்கு தூண்டில் போடும் இயக்குனர்

Trending News