வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் தயார்.. புதிய யுக்தியை கையிலெடுத்த பிரியா பவானி சங்கர்

இப்போதெல்லாம் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின்களும் வலுவான ஆக்சன் கதைகளை தேர்வு செய்து சோலோ நாயகியாக நடித்து வருகிறார்கள். ஏற்கனவே பல நடிகைகள் சோலோ நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது இந்த வரிசையில் நடிகை பிரியா பவானி சங்கரும் இணைந்துள்ளார்.

கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது சர்ஜூன் இயக்கத்தில் பிளட் மணி என்ற படத்தில் நடித்துள்ளார். வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

blood money
blood money

ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பிரியா பவானி சங்கர் ஒரு முன்னணி மீடியாவில் வேலை பார்க்கிறார். சமையல் ஷோ நடத்தி கொண்டிருந்தவருக்கு செய்தி பிரிவுக்கு புரமோஷன் கிடைக்க அவர் ஏற்கும் முதல் வேலையே பரபரப்பாக உள்ளது.

blood money
blood money

குவைத்தில் வேலை பார்க்கும் கிஷோரும் அவரது தம்பியும் விபத்து ஏற்படுத்திய காரணத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பின்னர் ஐந்து வருடம் கழித்து அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவர ஒரு நாளே உள்ள நிலையில், பிரியா பவானி சங்கர் தன் மீடியா மூலம் அதை சாதித்தாரா என்பதே கதை.

blood money
blood money

இதுவரை ஹீரோவுடன் சேர்ந்து டூயட் மட்டுமே பாடி வந்த பிரியா பவானி சங்கர் தற்போது சோலோவாக நடிக்கும் புதிய யுக்தியை கையில் எடுத்து கலக்கியுள்ளார். அதிலும் தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளார். கிட்டத்தட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலவே தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கட்சிதமாக செய்து முடித்துள்ளார்.

blood money
blood money

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவர்தான் என படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இது தவிர படம் பார்த்த அனைத்து பிரபலங்களுமே படத்தை புகழ்ந்து வருகிறார்கள். அவர்களின் கமெண்ட் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

Trending News