சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அந்த ஹீரோ மட்டும் வேண்டாம்.. கிசுகிசுவால் பயந்துபோன பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவில் விறுவிறுவென முன்னணி நடிகையாக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே அவரது நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.

தற்போது இரண்டாம் கட்ட நடிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வருகிறார் ப்ரியா பவானி சங்கர். அவருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே பல பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

அதிலும் ஒரு சில நடிகர்கள் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்யும்போதே மேலும் சில படங்களுக்கு சேர்த்து ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அந்தளவுக்கு அவரிடம் என்ன இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தொலைக்காட்சியில் இருந்து சீரியலுக்கு வந்து தற்போது சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் அடுத்ததாக விஷால் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

அடங்கமறு என்ற வெற்றிப்படத்தை கொடுத்த கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து தற்போதைக்கு அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள் எதுவும் உண்மை இல்லை எனவும் மறுத்துள்ளார்.

ஏற்கனவே விஷாலுடன் நடிக்கும் நடிகைகள் தொடர்ந்து அவருடன் கிசுகிசுக்களில் சிக்குவதால் விஷாலுடன் நடிக்க மட்டும் பிரியா பவானி சங்கர் யோசித்து வருகிறார் என்கிறது சினிமா வட்டாரம்.

priya-bhavani-shankar-cinemapettai
priya-bhavani-shankar-cinemapettai

Trending News