செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மொத்த பழியும் பிரியா பவானி சங்கர் தலையில் இறக்கிய விஷால்.. ரத்னம் தம்பிக்கே கிடைக்காத அங்கீகாரம்

Vishal : விஷால் பேசுவது ஒவ்வொன்றும் வேடிக்கையாக இருக்கும் நிலையில் இப்போது மொத்த பழியையும் பிரியா பவானி சங்கர் தலையில் இறக்கி இருக்கிறார். ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்னா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக விஷால் நடித்துள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் தான் நடித்து வந்தார்.

இப்போது தான் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில் படிப்படியாக முன்னேறி வருகிறார். ஆனால் ரத்னம் பட ப்ரமோஷன் எதற்குமே பிரியா பவானி சங்கர் கலந்து கொள்ளவில்லை. இதற்குக் காரணம் விஷால் தான் என்று கூறப்படுகிறது.

விஷாலால் ரத்னம் பிரமோஷனில் கலந்து கொள்ளாத பிரியா பவானி சங்கர்

அதாவது இயக்குனர் ஹரியிடம் ரத்னம் பட ப்ரமோஷன் நானே பண்ணுகிறேன் என்று விஷால் கூறினாராம். ஏனென்றால் பிரியா பவானி சங்கர் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இதனால் பிரமோஷனல் அவர் வேண்டாம் என்பது போல கூறி இருக்கிறார்.

இதை அறிந்த ரசிகர்கள் ரத்னம் தம்பியின் படமே எதுவும் ஓடவில்லை இதில் பிரியா பவானியை குறை சொல்கிறாரா என்று கிண்டல் அடித்திருக்கின்றனர். ஏனென்றால் சமீப காலமாக விஷால் நடிப்பில் வெளியான எந்த படமுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

லத்தி படம் மட்டும் ஓரளவு தலை தப்பியது. இப்போது ரத்னம் படத்தை விஷால் பெரிதும் நம்பி இருக்கிறார். இன்று இந்த படம் வெளியான நிலையில் நாளை வசூலை பொறுத்து தான் படத்தின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது தெரியவரும்.

Trending News