புதன்கிழமை, மார்ச் 19, 2025

பிரியா பவானி சங்கருடன் நெருக்கம் காட்டும் நடிகர்.. கடுப்பான ரசிகர்கள்

செய்தி வாசிப்பாளராக இருந்த போதே ப்ரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதை வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் வாய்ப்பு கிடைத்து நடித்தார்.

சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு கூட அப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு அந்த ஒற்றை சீரியலில் மொத்த ரசிகர்களையும் கவர்ந்து சினிமாவிலும் மேயாதமான் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அந்த படத்தில் பிரியா பவானி சங்கரின் நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்துப்போக அவர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்ததால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் விளைவு தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார்.

அடுத்ததாக பிரியா பவானி சங்கர் நடிப்பில் மட்டும் கிட்டதட்ட பத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. மேலும் சில படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இப்படி சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மேலும் இளம் நடிகர்கள் பலரும் பிரியா பவானி சங்கருடன் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் முதல் நாளாக இருப்பது என்னமோ ஹரிஷ் கல்யாண் தான். இருவரும் சேர்ந்து ஓ மணப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த போதே இருவரும் அவ்வப்போது நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேற்றி வந்தனர்.

இதெல்லாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கத்தான் என்று ரசிகர்களுக்கு தெரிந்தாலும் பிரியா பவானி சங்கரை ஹரிஷ் தொட்டாலோ, அவருடன் நெருக்கம் காட்டினாலோ ஹரிஷ் கல்யானை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி வருகின்றனர். நீங்களும்தான் கைய வெச்சிகிட்டு கொஞ்ச நேரம் சும்மா இருங்களேங்க!

harish-kalyan-priya-bhavani-shankar
harish-kalyan-priya-bhavani-shankar
Advertisement Amazon Prime Banner

Trending News