வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2025 வரை பிஸியாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர்.. போட்டி போட்டு சிபாரிசு செய்யும் 2 ஹீரோக்கள்

Priya Bhavani Shankar is busy in tamil and telungu till 2025: தனியார்  தொலைக்காட்சிகளில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். அழகும் அறிவும் ஒருங்கே அமையப்பெற்று ஆர்ப்பாட்டமற்ற வசீகர தோற்றத்துடன் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகான இந்த நடிகை மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு என கைவசம் ஆறு படங்களோடு 2025 வரை பிசியாக உள்ளார் பிரியா.

பீமா: “கல்யாணம் கமனியம்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ப்ரியா தற்போது கோபி சந்தின் ஜோடியாக தெலுங்கில் பீமா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் மற்றொரு கதாநாயகியாக மாளவிகா சர்மாவும் நடிக்க உள்ளாராம்.

டிமான்டி காலனி 2: 2015  அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த டிமான்டி காலனி வெற்றி பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. அருள்நிதியுடன் முன்னணி கதாபாத்திரத்தில் ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பயமுறுத்தியது. முந்தைய பாகத்தில் ஹீரோயினுக்கு அதிகம் அழுத்தம் இல்லாமல் நண்பர்களை மையமாக  வைத்து மட்டுமே திகிலூட்டிய அருள்நிதி இரண்டாம் பாகத்திற்கு பிரியா வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.  இயக்குனரினமும் தயாரிப்பாளர் இடமும் பலமான சிபாரிசு வேறு வைத்துள்ளாராம்.

Also read: தப்பிக்க முடியாத ஆபத்தான உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஆத்மா.. கொல நடுங்க வைக்கும் டிமான்டி காலனி 2 ட்ரெய்லர்

ரத்னம்: அருண் விஜயின் யானை திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஹரி இயக்கத்தில்  விஷாலுடன் ரத்னம் படத்திற்காக இணைகிறார் பிரியா. கிராமத்து சப்ஜெக்ட்டை மையமாகக் கொண்டு பல சமூகப் பிரச்சனைகளை அலசும் படத்தில் முக்கிய வேடத்தில் தோன்ற உள்ளாராம் பிரியா.

இந்தியன் 2 : “இந்தியன் இஸ் பேக்” என்றுபல ஆண்டுகளுக்கு பின்பு உருவாகி வரும்  கமலின் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தில் கமலுடன் சித்தார்த், காஜல் அகர்வால்,எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் என பல நட்சத்திர பட்டாளங்கள். மான்ஸ்டர் படத்திலேயே எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா ஜோடி கிசுகிசுக்கப்பட்டது இதற்கு பின்னும் எஸ் ஜே சூர்யாவுமே பல படங்களுக்கு பிரியா பவானி சங்கரின் பெயரை சிபாரிசு செய்வதாக கேள்வி

ஜீப்ரா: தன் நடிப்பில் தமிழ் ரசிகர்களை சொக்க வைத்த பிரியா தெலுங்கிலும் தன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளார். தெலுங்கில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்திய தேவ் மற்றும் தனஞ்செயனுடன் இணைந்து நடித்த ஜீப்ரா மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது.

அகம் பிரம்மாஸ்மி: ஸ்ரீகாந்த் ரெட்டி இயக்கத்தில் மனோஜ் மஞ்சு மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருடன் பிரியா பவானி சங்கர் கூட்டணி அமைத்து நடித்த அகப்பிரம்மாஸ்மி  தரமான ஆக்சன் திரில்லர் திரைப்படம்.  சில ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்ட இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: 2024 இல் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 6 படங்கள்.. இந்தியன் 2வுக்கு டப் கொடுக்க வரும் கல்கி

Trending News