சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தனுஷின் பார்வையில் விழுந்த பிரியா பவானி சங்கர்.. நெருங்க வேண்டாம் என எச்சரிக்கும் சிலர்!

தனுஷ் என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் நடிகைகள் விஷயத்தில் அவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆகிவிட்டது என்னவோ உண்மைதான். இன்னைக்கும் தனுஷுடன் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமா வட்டாரங்களில் இருந்து பல அட்வைஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளவர் தனுஷ். அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் D44 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன. அதில் தனுஷுடன் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் மாப்பிள்ளை படத்திற்கு பிறகு பத்து வருடங்கள் கழித்து தனுஷுக்கு ஜோடியாக மீண்டும் ஹன்சிகா நடிக்க உள்ளாராம்.

அதனைத் தொடர்ந்து நித்யா மேனன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தன. இதற்கிடையில் தான் மூன்றாவது கதாநாயகி யார்? என்பதில் ஏகப்பட்ட போட்டிகள் நடந்து வந்தன. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் பெயரை டிக்கடித்துள்ளாராம் தனுஷ்.

ஏற்கனவே ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமான பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் பல நடிகைகள் அவர் மீது பொறாமையில் இருக்கிறார்களாம்.

இது ஒருபுறமிருக்க தனுஷுடன் நடித்த நடிகைகள் பலரும் அவருடன் கிசுகிசுக்கப்படுவதுண்டு. அந்தவகையில் நீயும் தனுஷ் விஷயத்தில் மாட்டிக் கொள்ளாதே என பலரும் பிரியா பவானி சங்கர் எச்சரித்து வருகிறார்களாம். ஆனால் அவரோ, ஆனாளப்பட்ட எஸ் ஜே சூர்யாவையே பார்த்து விட்டேன், இவரையும் ஒரு கை பார்த்து விடுகிறேன் என கிளம்பி விட்டாராம்.

priya-bhavani-shankar-cinemapettai
priya-bhavani-shankar-cinemapettai

Trending News