சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கீர்த்தி சுரேசுக்கு போட்டியாக உடம்பை குறைத்த பிரியா பவானி சங்கர்.. எலும்பும் தோலுமாக மாறிய புகைப்படங்கள்!

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம். ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் கொடிகட்டி பறக்கும் நாயகி, பிரியா பவானி சங்கர்(Priya Bhavani Shankar).

இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி. தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

முதலில் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருந்த பிரியா பவானி சங்கர் சமீப காலமாக தொடர்ந்து ஜிம் ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை பாதியாகக் குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார்.

priya-b havani-shankar-1
priya-b havani-shankar-1

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இதே போல் நிறைய நடிகைகள் கொழுகொழுவென இருக்கும் தனது உடலை குறைத்த பிறகு ரசிகர் பட்டாளம் இல்லாமல் காணாமல் போயினர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

priya-bhavani-shankar-2
priya-bhavani-shankar-2

Trending News