புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அனைத்து குடும்பப் பெண்களுக்கும் தெரியக்கூடிய ஒரு நாயகியாக பிரபலமடைந்தார்.
சின்னத்திரையில் பிரபலமடைந்த காரணத்தால் இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரை கதாநாயகியாக அனைத்து ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.
அதன்பிறகு ப்ரியா பவானி சங்கருக்கு கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்கமுடியாத நாயகியாக பிரபலமடைந்தார்.
தற்போது இவருக்கு கைவசம்மாக குருதி ஆட்டம், ஓமன பெண்ணே, பொம்மி போன்ற பல படங்கள் உள்ளன. தொடர்ந்து பிரியா பவானி சங்கர் சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
தற்போது கூட அங்கு என்ன தெரிகிறது என்ற டைட்டிலில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து சில ரசிகர்கள் அழகியே, வெரி க்யூட், எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றனர்