வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பழைய காதலருக்கு டாட்டா காட்டிய பிரியா பவானி சங்கர்? சூசகமாக போட்ட போஸ்ட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட பத்து வருட காலமாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். அடிக்கடி அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய காதலை அவ்வப்போது பத்திரிகைகளுக்கு தெரிவித்து வந்தார்.

அதுவும் குறிப்பாக பிரியா பவானி சங்கர் மற்றும் நடிகர்களுடன் படங்களில் நெருங்கிய ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது பழைய காதலரை பிரியா பவானி சங்கர் பிரிந்துவிட்டார் என்ற செய்தி இணையத்தில் உலா வரும். அது அப்போது பெரிதும் கண்டுகொள்ளப்படவில்லை.

ஆனால் சமீபகாலமாக பிரியா பவானி சங்கர் இளம் நடிகர் ஒருவருடன் அதிகளவில் நெருக்கம் காட்டி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் புலப்படவில்லை. இந்த நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் போட்ட பதிவு ஒன்று செம வைரலாகி வருகிறது.

பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலர் ராஜ் வேலை எப்போதுமே அவருடைய தந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுவார். தந்தையைப் போல் என்னை பார்த்துக் கொள்வார் எனவும் பலமுறை அவரது காதலரைப் பற்றி பெருமையாக பேசி பதிவுகளை போட்டுள்ளார் பிரியா பவானி சங்கர். ஆனால் சமீபத்தில் அவர் போட்ட பதிவு அவருடைய காதல் முறிவுக்கான அறிகுறி என்பது குறிப்பது போல இருக்கிறது.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

அதாவது அவர் போட்ட பதிவில் யாராவது கடைசி வரை உன் கூட இருப்பேன் என்று கூறினால் அதற்கு என்னுடைய ரியாக்சன் இதுதான் என்று கூறி ஒரு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். பசியில் கிடந்த அவனுக்கு பிரியாணி பொட்டலம் கிடைத்தது போல இந்த பதிவு போட்டதுமே இணையத்தில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலரைப் பிரிந்து விட்டார் எனவும் இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருகிறார் எனவும் ஒரு புதிய செய்தியை கிளப்பிவிட தொடங்கிவிட்டனர். இப்போது இதை சரிகட்ட அவர் இன்னொரு மீம் போட வேண்டியதாகிவிட்டது.

Trending News