திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மூக்குத்தி குத்தி கியூட் ஹோம்லியாக மாறிய பிரியா பவானி சங்கர்.. ஒரே புகைப்படத்திற்கு ஒரு லட்சம் லைக்குகள்

விஜய் சேதுபதி எப்படி கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறாரோ அதேபோல் நடிகைகளில் பிரியா பவானி சங்கர் கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்து கோலிவுட் ராணியாக வலம் வருகிறார்.

இன்னும் கொஞ்ச நாளில் நயன்தாரா மார்க்கெட்டை ஓரம் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். தமிழில் மட்டுமல்லாமல் தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா கேரியரை தொடங்கி பின்னர் சீரியல் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சரியான நேரத்தில் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகிய நடிகர்களுக்கு பிறகு இருக்கும் அனைத்து நடிகர்களின் படங்களிலும் தற்போது பிரியா பவானி சங்கர் தான் ஹீரோயின். போட்டி போட்டுக் கொண்டு ஒன்றுக்கு இரண்டு படங்களாக பிரியா பவானி சங்கரை இளம் நடிகர்கள் புக் செய்து வருகின்றனர்.

விரைவில் முன்னணி நடிகர்களுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதற்கு ஏற்றார் போல அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது. அந்த ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் புதிய படம் ஒன்றிற்காக மூக்குத்தி குத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.

priya-bhavani-shankar-cinemapettai
priya-bhavani-shankar-cinemapettai

Trending News