திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

SJ சூர்யா போர் அடித்ததால் கருநாகத்துடன் இணையும் பிரியா பவானி.. சுட சுட வெளியான அப்டேட்

Actress Priya Bhavani Shankar: சீரியல் நடிகையாக இருந்து தற்போது டாப் நடிகைகளுக்கு எல்லாம் தண்ணி காட்டிக் கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமாகி, வெகு சீக்கிரமே முன்னணி நடிகர்களான ஜெயம் ரவியின் அகிலன், சிம்புவின் பத்து தல போன்ற படங்களில் வரிசையாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அது மட்டுமல்ல மான்ஸ்டர் படத்தின் மூலம் நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யாவுக்கு கதாநாயகியாக நடித்த பிரியா பவானி சங்கர் மீண்டும் பொம்மை படத்தில் இரண்டாவது முறையாக அவருடன் ஜோடி போட்டுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. ஜூன் 16 ஆம் தேதி ஆன நாளை ரிலீசாக இருக்கும் பொம்மை படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தற்போது படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

Also Read: சினிமாவிலும் ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு.. பதற வைக்கும் பேட்டியை அளித்த பிரியா பவானி

இதற்கிடையில் எஸ்ஜே சூர்யாவுடன் இரண்டு முறை நடித்து போர் அடித்ததால் இப்போது கருநாகத்துடன் அடுத்த படத்தில் பிரியா பவானி சங்கர் கமிட்டாகி இருக்கிறார். கமர்ஷியல் படங்களை இயக்கியதன் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக விஷாலை கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கரை கதாநாயகியாகவும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.

சில வருடங்களாகவே பணமோசடி, இயக்குனருடன் தகராறு, உடல் நலக்குறைவு என விஷாலுக்கு போதாத காலமாக இருக்கிறது. இதனால் வேற எந்த வம்புக்கும் போகாமல் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று, விஷால் இப்போது நடிப்பதில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதற்காக இவருடைய மேனேஜரை கூட மாற்றி விட்டார்.

Also Read: சிம்ரன், த்ரிஷாவுக்கு அப்புறம் நீங்க தான் டாப்பு.. 50 வயதிலும் பிரியா பவானிக்கு தூண்டில் போடும் இயக்குனர்

மேலும் பிரபல கவர்ச்சி நடிகை பல பேர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக புகார் அளித்தார். அந்த லிஸ்டில் விஷாலையும் அனகோண்டா எனக் குறிப்பிட்டு அவருடைய பெயரையும் பட்டியலில் சேர்த்து விட்டார்.
இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் விஷால் மறுபடியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

அதிலும் முதல்முறையாக பிரியா பவானி சங்கர் உடன் விஷால் இணைந்திருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே விஷாலின் தாமிரபரணி, பூஜை போன்ற இரண்டு படங்களை ஹரி இயக்கியிருக்கும் நிலையில், 3வது முறையாக விஷாலுடன் இணைந்திருக்கிறார்.

Also Read: ப்ரியா பவானியைப் போல் நம்மளும் டாப்ல வந்துடலாம்.. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட 5 நடிகைகள்

Trending News