வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மறைமுகமாக ஆண்டவரை தாக்கிய பிரியா பவானி சங்கர்.. கேரியருக்கு வந்த கரும்புள்ளின்னு புலம்பிய ஹீரோயின்

செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரையில் அறிமுகமாகி, அதன்பின் வெள்ளி திரையில் கொடி கட்டி பறப்பவர் பிரியா பவானி சங்கர். 2022பின் 12 படங்கள் நடித்தாலும் இவருக்கு எந்த படமும் ஓடவில்லை. இதனால் சமீப காலமாக விரக்தியில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்தது டிமான்டி காலனி 2 படம். இந்த படத்தின் முதல்பாகம் பெரிய ஹிட் அடித்தது அதனால் இரண்டாம் பாகத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு உண்டான போதிலும் ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. இதனால் இந்த படமும் இவருக்கு பெரிய அடியாக அமைந்தது.

கடைக்குட்டி சிங்கம், யானை, திருச்சிற்றம்பலம் என சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தபோதிலும் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி சமீபத்தில் ஹிட் அமையவில்லை. இதனால் தன்னுடைய கேரியருக்கே ஆபத்து வந்துள்ளது என நெருங்கிய தோழிகளிடம் குமுறி வருகிறார்.

கேரியருக்கு வந்த கரும்புள்ளின்னு புலம்பிய ஹீரோயின்

சில மாதங்களுக்கு முன்பு உச்ச நடிகர் படம் என்று 55 நாட்கள் வெயில் மழை என்று பாராமல் நடித்துக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த படத்தில் ஏன் நடித்தோம் என இப்பொழுது வரை எண்ணி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். தனக்கு முக்கிய கதாபாத்திரம் என சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். நான் அதிக நாட்கள் கால் சீட் கொடுத்தது இந்த படத்திற்குத்தான் என கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை கூறி வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2 படம் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் மூலம் எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தால் தான் நடித்த டிமான்டி காலனி 2 படமும் சரியாக போகவில்லை என கமல் படத்தை குற்றம் சாட்டி புலம்பி வருகிறார் பிரியா பவானி சங்கர்.

Trending News