புதன்கிழமை, ஜனவரி 15, 2025

செய்தி வாசிப்பாளராக இருந்து பட வாய்ப்பை தட்டி தூக்கிய 12 நடிகைகள்.. இப்போ இவங்க தான் டாப்.!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்கள் செய்தி வாசிப்பதோடு மட்டும் இல்லாமல் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரைகள் பிரபலமாகி வருகிறார்கள் .சின்னத்திரை, வெள்ளி திரைகள் போன்றவற்றில் அவர்கள் தங்களது வெற்றி கொடியை நாட்டி வருகிறார்கள்.

பிரியா பவானி சங்கர்: வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். செய்தி வாசிப்பாளராக 2012ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியவர். ஜோடி  நம்பர் 1 ,சூப்பர் சிங்கர் சீசன் 5 ,கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக இருந்தார். பின் கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலமாக பிரபலமான 2017 ஆம் ஆண்டு மேயாத மான் திரைப்படம் மூலமாக ஹீரோயினாக மாறியுள்ளார். தற்போது இவங்க தான் டாப் ஹீரோயின்கள் என்ற வரிசையில் பல படங்களை கையில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

 பிரியா பிரின்ஸ்: தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவராக இருந்து பின் சின்னத்திரையில் தொடர்களில் நடித்தார் என் பெயர் மீனாட்சி, கண்ணான கண்ணே , தவணை முறை வாழ்க்கை ,மாப்பிள்ளை, பொன்மகள்வந்தாள் போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். தமிழ் கடவுள் முருகன் என்னும் தொடரில் பார்வதி கதாபாத்திரம் இவருக்கு மிகவும் பிரபலத்தை ஏற்படுத்தியது.

நித்தியா குமார்: சின்னத்திரையில் பூவே பூச்சூடவா தொடரில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் தொடங்கியவர். பின் சிவா மனசுல சக்தி தொடரில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு தற்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக மாறியுள்ளார்.

nithya kumar
nithya kumar

உமா பத்மநாபன்: முன்னணி செய்தி வாசிப்பாளராக இருந்த உமா பத்மநாபன் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமானவர் சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயாவுக்கு தாயாகவும் நடித்திருக்கிறார். பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து இருக்கிறார்.

 அபிநயா: செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தைத் தொடர்ந்த அபிநயா பிரியமானவள் தொடர் மூலமாக சின்னத்திரைக்கு வந்தார். அடுத்தடுத்து பல தொடர்கள் பிரபலமான கண்மணி, சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களில் இவருக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.

சரண்யா துரை சுந்தர்ராஜ்: நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலமாக சின்னத்திரையில் பயணித்தவர் சரண்யா. இதைத்தொடர்ந்து ஆயுத எழுத்து ,மகாபாரதம் போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார் .தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இவரும் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர்.

ரேவதி ஞானமுருகன்: இவர் முதன்முதலில் மெட்டிஒலி தொடர் மூலம் அறிமுகமானார். பவானி கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை நடித்திருப்பார். அதை தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக மாறினார் தற்போது ராஜபார்வை, பூவே பூச்சூடவா போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.

பாத்திமாபாபு: பிரபல செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 25 ஆண்டுகளாக தூர்தர்ஷனில் செய்தியாளராக இருந்தவர். தற்போது சின்னத்திரையில் யாரடி நீ மோகினி பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கெடுத்து வருகிறார். தற்போது பிபி ஜோடி களிலும் கலக்கி வருகிறார்.

fathima-babu
fathima-babu

மலர்விழி :செய்தி வாசிப்பாளரான இவர் தற்போது சின்னத்திரையில் “தாலாட்டு எ”ன்ற தொடரில் “தாரா “கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

 அனிதா சம்பத் :செய்தி வாசிப்பாளரான இவர் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு பிக் பாஸ் சீசன்4 கலந்து கொண்ட பின்னர் ஜில்லுனு ஒரு காதல் என்ற தொடரில் நடித்துள்ளார்.ஒரு சில படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

anitha sampath
anitha sampath

வரதராஜன்: முன்னணி செய்தியாளர்கள் ஒருவரான வரதராஜன் சுமார் இருபத்தி எட்டு ஆண்டுகளாக தூர்தர்ஷனில் செய்தி வாசித்தவர். பின்னர் சின்னத்திரையில் காதல் பகடை, அண்ணி ,தாமரை போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

 ஸ்ரீ வித்யா சங்கர்: பல வருடங்களாக செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தற்போது பல தொடர்களில் நடித்து வருகிறார் வள்ளி, சுமங்கலி ,மாயா, டார்லிங் டார்லிங் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் அம்மாவாக “கலைவாணி” கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

Trending News