சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பிட்டு நடிகையுடன் நடிக்கும் நடிகரை பங்கமாக கலாய்த்த பிரியா பவானி சங்கர்.. ஓவர் குசும்பு தான்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் தன்னுடைய கேரியரை ஆரம்பித்தது என்னவோ சின்னத்திரையில் தான். ஆனால் தற்போது வெள்ளித்திரை நாயகியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிலரை தவிர மற்ற அனைத்து நடிகர்களின் படங்களிலும் நடிக்கும் நாயகிகளில் முதல் சாய்ஸாக இருப்பதும் பிரியா பவானி சங்கர் தான்.

பார்த்தவுடனே பத்திக்கும் தோற்றத்தில் இருக்கும் பிரியா பவானி ஷங்கரை யார்தான் மறுப்பார்கள். அந்த வகையில் அடுத்ததாக பிரியா பவானி சங்கர் நடித்து முடித்துள்ள ஏகப்பட்ட படங்கள் ரிலீஸுக்கு வரிசையாக காத்துக்கொண்டிருக்கின்றன.

அதில் எஸ் ஜே சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுடன் ஓமணப் பெண்ணே, அதர்வாவுடன் குருதி ஆட்டம், அசோக் செல்வனுடன் ஹாஸ்டல் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸின் ருத்ரன், அருண் விஜய்யின் AV33 போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமீபகாலமாக காமெடி நடிகர் சதீசை தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கலாய்த்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

காமெடி நடிகர் சதீஷ் அடுத்ததாக சன்னி லியோனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதனை கிண்டலடிக்கும் வகையில் பிரியா பவானி சங்கர், அந்த படத்தில் பூஜை புகைப்படங்களை பகிர்ந்து, ‘என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு’ என பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

priya-bhavani-shankar-tweet-about-sathish
priya-bhavani-shankar-tweet-about-sathish

Trending News