சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஒரு துளி மேக்கப் இல்லாமல் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம்.. ஹார்ட் அட்டாக்கில் நெஞ்சை பிடித்த ரசிகர்கள்

இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி பிரியா பவானி சங்கர். தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பிரியா பவானி சங்கரின் பட வரிசையை பார்க்கும்போது கண்டிப்பாக நயன்தாராவை ஓரம்கட்டி தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக விரைவில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இளம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருடத்திற்கு 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மட்டும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் வெளியாக உள்ளதாம்.

ப்ரியா பவானி சங்கர் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் ஒரு புகைப்படத்தை ரொம்ப க்ளோஸப்பில் எடுத்து வெளியிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவரையா இவ்வளவு நாள் ரசித்தோம் எனும் அளவுக்கு மனம் நொந்து போய் விட்டனர்.

priya-bhavani-shankar-cinemapettai
priya-bhavani-shankar-cinemapettai

Trending News