புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆட்டம் கண்ட பிரியா பவானி சங்கர் கேரியர்.. பழைய குருடி, கதவைத் திறடி என புலம்பல்

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த வேகத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகளைப் பெற்று பிசியாக நடித்துக் கொண்டிருந்தார் பிரியா பவானி சங்கர். இவருடைய வரவுக்குப் பிறகு தான் சின்னத்திரையில் இருந்து ஏராளமான நடிகைகள் வெள்ளித்திரையில் ஹீரோயினாக களம் இறங்கினார்கள்.

இப்படி போட்டி நடிகைகளில் வரவு அதிகமானதால் ப்ரியா பவானி சங்கருக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து வருகிறது. ஏற்கனவே நடித்து முடித்த சில திரைப்படங்கள் வெளிவர முடியாமல் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அவருக்கு தற்போது எந்த புது பட வாய்ப்புகளும் வருவதில்லையாம்.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய காதலர் தான் என்று கூறப்படுகிறது. அவருடைய கட்டாயத்தின் பேரில்தான் பிரியா பவானி சங்கர் கிளாமர் ரோல்களை ஏற்காமல் இருந்தார். அதுமட்டுமல்லாமல் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் இவர் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறாராம். இதனால் அவரை புக் செய்யவே பலரும் தயங்கி வருகிறார்கள்.

மேலும் இவரிடம் வலுவான கதாபாத்திரங்களை கொடுப்பதற்கும் இயக்குனர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஏனென்றால் முகத்தில் எக்ஸ்பிரஷன் இல்லாமல், சீரியலில் நடித்ததைப் போன்ற ஒரே முக பாவனையுடன் இவர் நடிப்பதால் இது வேலைக்காகாது என்று பலரும் இவருக்கு வாய்ப்பு தர மறுக்கின்றனர்.

இதனால் அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம். மேலும் பழையபடி சீரியலுக்கே சென்று காலத்தை ஓட்டலாம் என்றும் அவர் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால், கிடப்பில் கிடக்கும் அவருடைய படங்கள் வெளிவந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அவருடைய தோழிகள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்களாம். தற்போது அவர் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை தான் பெரிதும் நம்பி இருக்கிறார். அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை என்றால் பழையபடி சின்னத்திரைக்கே சென்று விடுவதுதான் அவருடைய முடிவாக இருக்கிறது.

Trending News