சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரொமான்ஸ் காட்சியில் சீன் போட்டு பொத்துனு மல்லாக்க விழுந்த பிரியா வாரியர்.. கைகொட்டி சிரிக்கும் ரசிகர்கள்

ஒற்றைக் கண் சிமிட்டியது மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். மலையாள சினிமாவில் அறிமுகமான பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவியாக பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வந்தார். இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் படக்குழு படத்தை முழுவதுமாக முடித்து டிரெய்லரை வெளியிட்டு ரசிகர் மத்தியில் ஓரளவுக்கு பாராட்டை பெற்றன.

தற்போது பிரியா பிரகாஷ் வாரியர் தெலுங்கில் செக் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ரகுல் பிரீத் சிங் மற்றும் முரளி சர்மா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மற்றும் சூட்டிங் ஸ்பாட் காட்சிகளை வெளியிட்டு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

பிரியா பிரகாஷ் வாரியர் நிதினுடன் காதல் செய்யும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அப்போது வேகமாக ஓடிவந்து நிதின் மீது ஏறி உட்காருவது போல் காட்சி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராவிதமாக பிரியா பிரகாஷ் வாரியர் கீழே விழுந்தார்.

அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் எதார்த்தமாக பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த ஒரு சில நெட்டிசன் கீழே விழுந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றன.

Trending News