தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் பிரபல நடிகர் ஒருவருக்கு சமூகவலைதளத்தில் ஓப்பனாக 100 முறை ஐ லவ் யூ சொல்லி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பிரியா பவானி சங்கர் இல்லாத படமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு 2021 ஆம் ஆண்டு மட்டும் கிட்டதட்ட பத்து படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் தொடர்ந்து ப்ரியா பவானி சங்கருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. வெகுவிரைவில் தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் நடிகையாக வலம் வருவார் என கணித்துள்ளனர்.
பிரியா பவானி சங்கர் ஏற்கனவே ராஜவேல் என்பவரை காதலித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரே அதிகாரபூர்வமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். எஸ் ஜே சூர்யா மற்றும் பிக் பாஸ் கவின் ஆகியோருடன் ஏற்பட்ட கிசுகிசு காரணமாக ஓபன் ஆகவே தெரிவித்தார் பிரியா பவானி சங்கர்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய பக்கத்தில் பிரபல நடிகர் மாதவனுக்கு நூறு முறை ஐ லவ் யூ சொல்லி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியான மாதவனின் மாறாக படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.
மேலும் சிறு வயதிலிருந்தே பிரியா பவானி சங்கர் மாதவனின் பெரிய ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாறா பட புரமோஷனுக்காக பிரியா பவானி சங்கர் இப்படி செய்துள்ளது ரசிகர்களை அதிருப்தி ஆக்கியுள்ளது.