புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பாரதிராஜாவை நம்பி ஏமாந்து போன நடிகை.. முதல் படத்திலேயே இவ்வளவு பேராசை வேண்டாம்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு போக வேண்டுமே என நினைத்து கோடம்பாக்கத்தை சுற்றி வருவார்கள். அப்படி ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தையே சுற்றிச்சுற்றி வந்த நடிகை தான் பிரியாமணி.

ஆரம்ப காலத்தில் பிரியாமணி வெற்றிக்காக தமிழ் சினிமாவில் ரொம்பவும் தடுமாறிக் கொண்டிருந்தார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே கடை நன்றாக இருந்தாலும் சாப்பாடு நன்றாக இருக்காது, அந்த கதை போலத்தான் பிரியாமணி அழகாக இருந்தாலும் படத்தின் கதை நன்றாக இருக்காது. இதனாலேயே பிரியாமணி நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வி அடைந்தன.

இவ்வளவு ஏன் பாரதிராஜா “கண்களால் கைது செய்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பிரியாமணி அறிமுகமாகியுள்ளார். பாரதிராஜா மீது பிரியாமணி மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் ஆனால் இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

priyamani bharathiraja
priyamani bharathiraja

இதனால் பிரியாமணி மிகவும் நொந்து போனார். அதன்பிறகு அது ஒரு கனாக்காலம் மற்றும் மது போன்ற படங்களிலும் தொடர்ந்து 3  முன்று படங்கள் தோல்வியடைந்தன. இதனால் தமிழ் சினிமாவில் வெற்றியடைய முடியாது என நினைத்து தனது சொந்த ஊருக்கே செல்ல இருந்தார்.

அப்போதுதான் பருத்திவீரன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின்பு பிரியாமணிக்கு தமிழ் சினிமாவில் அடையலாம் கிடைத்தது.

பின்பு தமிழ் சினிமாவில் இவரால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாததால் வெளிமாநிலங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது வரை பிரியாமணி ஒரு சில படங்கள் மற்றும் வெப் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் எத்தனை படம் நடித்தாலும் அனைவருக்கும் ஞாபகம் வரக்கூடிய படமாக இருப்பது பருத்திவீரன் மட்டும் தான்.

Trending News