புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பிரியாமணியின் கவர்ச்சியில் விழுந்த பிரபல நடிகர்.. இந்த வித்தை இத்தனை நாள் தெரியாமல் போச்சே!

தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. அதன்பிறகு இவர் ஒரு சில படங்கள் நடித்தாலும் எந்த ஒரு படத்தை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை ஆனால் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.

அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் பிரியாமணி நிறைய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன ஆனால் சரியாக கதையை தேர்வு செய்யாததால் சில படங்கள் தோல்வியை சந்தித்தன.

அதன்பிறகு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி ஒரு சில வெற்றிப் படங்களையும் கொடுத்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல் டிவி நிகழ்ச்சியில் நடுவராக கவனம் செலுத்தி வந்தார்.

priyamani
priyamani

அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதே வாடிக்கையாக வைத்திருந்த பிரியாமணிக்கு தற்போது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னதான் கவர்ச்சி காட்டினாலும் நாரப்பா படத்தில் திறமையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது பிரியாமணி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த அஜய் தேவ்கன் தன்னுடைய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பிரியாமணிக்கு கொடுத்துள்ளார். அதனால் பிரியாமணி தற்போது மகிழ்ச்சியில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

priya mani ajay devgan
priya mani ajay devgan

Trending News