புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர்.. குடும்பத்தையே கேவலப்படுத்திய பிரியாமணி

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக நடிகைகள் விஷயத்தில் ரசிகர்கள் அத்துமீறுவது அடிக்கடி நடக்கின்றன. அதுவும் மிகவும் மோசமான கேள்விகளையும் அருவருக்கத் தக்க செயல்களையும் செய்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. கமர்ஷியல் நாயகியாக கலக்கிக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைந்த பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

தற்போது மீண்டும் செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ள பிரியாமணி தற்போது முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகளை பெற்று வருகிறார். அந்த வகையில் தமிழில் சூப்பர் ஹிட்டடித்த அசுரன் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கிடைக்கும் படவாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரசிகர் ஒருவர் பிரியாமணியிடம் நிர்வாண புகைப்படம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதைப் பார்த்து கடுப்பான பிரியாமணி, உன்னுடைய அம்மா மற்றும் அக்காவிடம் போய் கேள் என்றார்.

priyamani-replied-her-fans-cheep-comment
priyamani-replied-her-fans-cheep-comment

பிரியாமணியின் இந்த பதிவை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருந்தாலும் அத்துமீறும் ரசிகர்களுக்கு இந்த மாதிரி பதிலடி கொடுக்கவில்லை என்றால் மீண்டும் தங்களுடைய வேலைகளை காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள் என பிரியாமணியின் இந்த பதிவுக்கு பிரபலங்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

Trending News