செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

நியூ இயர் பார்ட்டிக்கு, கிளைமாக்ஸில் நடிக்காமல் கிளம்பிட்டாங்க.. 15 வருஷமா டேக்கா கொடுத்த முத்தழகு

Actress Priyamani: கோலிவுட்டில் சவுண்ட் பார்ட்டியாக ரவுண்டு கட்டிய ஹீரோயின் தான் பிரியாமணி. இவர் கையில் எடுக்கும் கேரக்டர் மட்டுமல்ல நிஜத்திலயுமே செம போல்ட். அதிலும் இவர் கார்த்தியுடன் இணைந்து நடித்த பருத்திவீரன் படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டி தூக்கினார்.

தற்போது சோசியல் மீடியாவில் பருத்திவீரன் படத்தைக் குறித்த சர்ச்சைகள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த படத்தை முதலில் தயாரிக்க முன்வந்த ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் அமீர் இருவருக்கும் தான் மோதல் வெடித்தது. ஆனா ஞானவேல் ராஜாவை விட பருத்திவீரன் படத்தில் முத்தழகாக நடித்த பிரியாமணி தான், கடந்த 15 வருடங்களாகவே எனக்கு டேக்கா கொடுக்கிற ஆள் என்று அமீர் சமீபத்திய பேட்டியில் பெரிய அணுகுண்டை தூக்கி போட்டார்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நெஞ்சை இழுத்துப் பிடிக்கும் வகையில் இருக்கும். இந்த கிளைமாக்ஸ் காட்சியில் பிரியாமணியின் முகம் தெரியாது, அலறல் சத்தத்துடன் உருவத்தை மட்டுமே காட்டினர். கிளைமாக்ஸில் முத்தழகை நான்கு லாரி டிரைவர்ஸ் சிதைத்து சின்னா பின்னமாக்கி விடுவார்கள்.

Also Read: நல்லான் வகுத்ததா நீதி இங்கே வல்லான் வகுத்ததே நீதி.. 17 வருட வலியை கொட்டிய பருத்திவீரன் அமீர்

கிளைமாக்ஸ்சில் நடிக்காமல் பார்ட்டிக்கு கிளம்பிய பிரியாமணி

ஏற்கனவே பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்பு குறித்த நாட்களை விட தள்ளிக்கொண்டே போன நிலையில், பிரியாமணி புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பருத்திவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்துக் கொடுக்காமலே நியூ இயர் பார்ட்டி செலபரேஷனுக்கு கிளம்பிவிட்டார்.

அமீர் எவ்வளவோ சொல்லியும், ‘நான் பார்ட்டி முடித்துவிட்டு வந்து நடித்துக் கொடுக்கிறேன்’ என கெத்து காட்டிவிட்டு கிளம்பி விட்டாங்க. கோபப்பட்ட அமீர், பிரியாமணி இல்லாமலே கிளைமாக்ஸ் காட்சியை எடுத்துக்காட்டுறேன் என சவால் விட்டார். சொன்னது போலவே பிரியாமணியின் ஹைட், வெயிட்டில் இருக்கும் ஒரு பெண்ணை வைத்து கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கினர்.

அதன் பிறகு 15 வருஷம் கழிச்சு தான் பிரியாமணியை, அமீர் பார்த்ததாக சமீபத்திய பேட்டியில் போட்டுடைத்தார். பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் பருத்திவீரன் உருவானது என, அடிக்கடி அமீர் நிறைய பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அதுவும் பிரியாமணி இல்லாமலே படத்தை முடித்து இருக்கிறார் என்பதை கேட்கும்போதே வியப்பளிக்கிறது.

Also Read: ஓவர் மமதையில் வந்த வாய்ப்பை தட்டிவிட்ட கார்த்தி.. உள்ளதும் போன பரிதாபம்

Trending News