ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

ரெண்டே படம் சக்சஸ்.. தலைகால் புரியாமல் ஆடும் பிரியங்கா அருள்மோகன்

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் இளம் நாயகி பிரியங்கா மோகன். டாக்டர் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர் எதற்கும் துணிந்தவன், டான் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமான நடிகையாக மாறி இருக்கிறார்.

தற்போது பல இயக்குனர்களும் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஆர்வத்துடன் இருக்கின்றனர் அந்த வகையில் இவர் தற்போது ஏராளமான கதைகளை கேட்டு வருகிறார். தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் இவர் நடித்திருந்தாலும் தற்போது தமிழில் முன்னணி நடிகையாக மாறுவதுதான் இவருடைய லட்சியமாக இருக்கிறது.

அந்த வகையில் இவர் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். மேலும் தனியார் யூடியூப் சேனல்களுக்கு பிஸியாக பேட்டி கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் கிளாமர் உடை அணிவது பற்றி இவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

தற்போது இருக்கும் இளம் நாயகிகள் பலரும் சினிமா வாய்ப்புக்காக கிளாமர் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் திரைப்படங்களிலும் கவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து வருகின்றனர். இதனால் நாம் குடும்பப்பாங்காக பார்த்த ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் போன்ற நடிகைகள் கிளாமர் ரூட்டுக்கு மாறி இருக்கின்றனர்.

இது குறித்து பேசிய ப்ரியங்கா மோகன் நடிகைகள் கிளாமர் காட்டுவதில் தப்பில்லை. கவர்ச்சியாக உடை அணிவது மற்றும் நடிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். கொஞ்சம் கிளாமராக உடல் தெரியும்படி உடை அணிந்தால் உடனே அவரைப் பற்றி தவறாக பேசக்கூடாது.

உடை என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். இதில் யாரும் தலையிட முடியாது என்று பளிச்சென்று கூறியிருக்கிறார். இதன் மூலம் நடிகைகளின் உரையைப் பற்றிய ஆபாச கமெண்ட் கொடுக்கும் நெட்டிசன்களுக்கு அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் இதுவரை அடக்க ஒடுக்கமாக நடித்த அவர் இனி கிளாமர் ரூட்டிற்கு மாறப் போகிறேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

Trending News