வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அபிஷேக் வெளியேறியதும் ருத்ரதாண்டவம் ஆடிய பிரியங்கா.. தெறித்து ஓடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இந்த வாரம் அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் அக்கா தம்பி போல் நெருக்கமாக பழகி கொண்டிருந்த பிரியங்காவிற்கு, அபிஷேக் மீண்டும் இரண்டாவது முறையாக வெளியேறியது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

எனவே அவர் சென்றபிறகு வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். குறிப்பாக நிரூப் மற்றும் அமீர் இருவரையும் பிரியங்கா தாளித்து எடுத்துவிட்டார்.

அதிலும் முக்கியமாக சனிக்கிழமை அன்று கமல் முன்பே அமீர், பிரியங்காவின் பெயர் அபிஷேக் ராஜாவால் வெளியில் டேமேஜ் ஆகிறது என்றும், அபிஷேக் ராஜா பிரியங்காவிற்கு நண்பனாக இருந்து குழி பறித்துக் கொண்டிருக்கிறார் என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டார்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அபிஷேக் ராஜா தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் அமீரிடம் பிரியங்கா தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் அமீர் பிரியங்காவிடம் சண்டை போடாமல் அமைதியாக சென்று விட்டார்.

தொடக்கத்தில் பிரியங்காவிடம் நெருங்கிய நண்பராக இருந்த நிரூப் மற்றும் அபிஷேக் ராஜா இருவருமே தற்போது பிரியங்காவிடம் இல்லை. நிரூப் கருத்து வேறுபாட்டினால் பிரியங்காவை விட்டு விலகிவிட்டார். அத்துடன் அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

இருப்பினும் பிரியங்காவிடம் பாவனி மற்றும் அபினை இருவரும் ஒன்று சேர்ந்து கொண்டு கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இவர்களால் வரும் வாரத்தில் என்னென்ன சம்பவம் நடக்கப் போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News