சனிக்கிழமை, பிப்ரவரி 1, 2025

ராஜமவுளி மணக்கோட்டையை தகர்த்த பிரியங்கா சோப்ரா.. ஸ்டேட்டஸ் உயர்வுக்கு முன் தப்பித்த தளபதி

இதுவரை சினிமா கேரியரில் சறுக்கல்களை சந்திக்காத ஒரே இயக்குனர் ராஜமவுலி. எடுத்த 11 படங்களும் சூப்பர் ஹிட் . இவரது இயக்கத்தில் நடித்து விடுவோமா என ஏங்கும் ஹீரோக்கள் பல பேர் இருக்கின்றனர். தமிழில் சமுத்திரகனி, நாசர், ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் இவர் இயக்கத்தில் நடித்துள்ளனர்.

இப்பொழுது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் அதற்காக உடல் எடையை குறைத்து நீண்ட தலைமுடியுடன் செம ஸ்டைலிசாக காட்சியளிக்கிறார் மகேஷ் பாபு . இந்த படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவாக போகிறதாம்.

இவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை கூட்டணி போட்டதில்லை. ஏற்கனவே மகேஷ் பாபுவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். அதனால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் புகழ் பிரியங்கா சோப்ரா ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

2000 ஆவது ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார் பிரியங்கா சோப்ரா. உலக அழகி போட்டியில் ஐந்தாவது இந்திய அழகி பட்டம் பெற்ற பெண் என்ற பெருமையை சேர்த்தார். பின்னர் 2001 ஆம் ஆண்டு விஜய்யுடன் தமிழ் படத்தில் அறிமுகமானார்.

தமிழன் என்ற படத்தில் தளபதியுடன் சேர்ந்து நடித்தார் பிரியங்கா சோப்ரா. அப்பொழுது அவர் வாங்கிய சம்பளம் வெறும் 60 லட்சங்கள். ஆனால் இப்பொழுது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். டான்,கிரிஸ் போன்ற படத்தில் நடித்து புகழ்பெற்ற இவர் இப்பொழுது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். மகேஷ்பாபு, ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இவர் 60 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

Trending News