வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சமந்தாவின் மகளான பிரியங்கா சோப்ரா, அந்த சீன் தான்.. வேற ஒன்னும் இல்ல

தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் சமந்தாவை பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கொண்டு சேர்த்தது. ஆனால் அந்த சீரிஸ் வெளியான நேரத்தில் சமந்தா மீது தமிழ் ரசிகர்கள் உச்சகட்ட கோவத்தில் இருந்தனர். தமிழர்களை இழிவுபடுத்திய வெபிஸீரீஸ்-ல் நடித்துள்ளீர்கள் என்று விமர்சித்தனர்.

இந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியான சமந்தாவின் சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸ் ரசிகர்களை கொஞ்சம் கூட கவரவில்லை. ரசிகர்கள் தொடர்ந்து நெகட்டிவ் ரிவியூ கொடுத்து வருகின்றனர்.

ரூசோ சகோதரர்கள் தயாரிப்பில் இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. ராஜ் மற்றும் டிகே இருவரும் இந்த சீரிஸை உருவாக்கியுள்ளனர். பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் வெப்சீரிஸுக்கு Prequal போல இந்த வெப்சீரிஸ் அமைந்துள்ளது.

அந்த சீன் மட்டும் தான்

சிட்டாடல் ஹன்னி பன்னி வெப் தொடர் வெளியாகி, கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. ருண் தவானை செல்லமாக bunny என அழைக்கின்றனர். சமந்தாவின் பெயர் ஹனி என அழைக்கப்படுகிறது. 1992 மற்றும் 2000 என இரு காலக்கட்டத்தில் நடக்கும் கதை தான் இந்த வெப்சீரிஸ்.

புராஜெக்ட் தல்வார் எனும் ரகசிய புராஜெக்ட் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் என பாபா தனது டீமை பயன்படுத்துகிறார். பாலிவுட் ஹீரோக்களுக்கு டூப் போடும் நடிகராக வரும் வருண் தவான் அநாதையாக இருந்த போது அவரை தத்தெடுத்து வளர்த்த பாபா ஏஜென்ட்டாக மாற்றுகிறார்.

துணை நடிகையாக நடிக்க வரும் ஹனி (சமந்தா) மீது வருண் தவானுக்கு காதல் ஏற்பட அவரை தனது டீமில் சேர்த்துக் கொள்ளும் சூழல் உருவாகிறது. இந்த நிலையில், சொந்த டீம் எதிர் டீம் இரண்டிடம் இருந்தும் தனது மகளை காப்பாற்ற போராடுகிறார் சமந்தா.

இந்த கதைக்கு இவ்வளவு பில்ட்டப்பா? என்று தற்போது தொடரை பார்த்த ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் ரொமான்ஸ் காட்சிகள் மட்டும் தான்.. அதை தாண்டி படத்தில் பார்க்க ஒன்றுமில்லை என்றும் கூறி வருகின்றனர்.

Trending News