தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் அந்த பிரபல நடிகை. இதைத் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்த முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஹாலிவுட்டில் மிகவும் பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா வெப் சீரிஸிலும் நடித்துவருகிறார்.
இவர் குவாண்டிகோ என்ற அமெரிக்கா டிவி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். பிரியங்கா சோப்ரா தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். பிரியங்கா சோப்ரா 2000 ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார்.
இவர் 2018 இல் தன்னை விட பத்து வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் இவருடைய மவுசு இன்னும் குறையவில்லை. திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் குறை வைக்காத பிரியங்கா சோப்ரா தன் கணவனுடன் கவர்ச்சியான உடையில் ரொமான்டிக் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.
இதனாலேயே பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 60 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். சமீபத்தில் பிரியங்காவும், அவரது கணவரும் சேர்ந்த அமெரிக்காவில் ஒரு வீடு வாங்கினார்கள். அந்த வீட்டில் முதல் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
இன்ஸ்டாகிராமில் பிரியங்கா சோப்ரா தனது பெயருக்குப் பின்னால் கணவரின் சர் நேம்மான ஜோனஸை பெயரை சேர்த்திருந்தார். தற்போது பிரியங்கா சோப்ரா திடீரென தனது கணவர் பெயரை நீக்கியுள்ளார். அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள். இருவருக்கும் விவாகரத்து ஆகப்போகிறதா என ரசிகர்கள் கேட்டாலும் அதற்கு மௌனமாக உள்ளார்கள்.
இதே போலதான் சமந்தாவும் விவாகரத்துக்கு முன் அவரது கணவர் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை நீக்கினார். அப்போதும் விவாகரத்து செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு சமந்தா மௌனம் சாதித்தார். பின்பு இருவருக்கும் விவாகரத்து ஆனது.