செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் செய்ததை வாழ்க்கையில் மறக்க முடியாது.. ஓப்பனாக சொன்ன பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா தன்னுடைய முதல் ஹீரோவான தளபதி விஜய்யை பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளது தளபதி விஜய் ரசிகர்களை பெருமைப்பட வைத்துள்ளது. இதனை சமூக வலைதளங்களில் டிரென்ட் செய்து வருகின்றனர்.

விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழன். பிரியங்கா சோப்ரா சினிமா கேரியரில் முதல் முதலாக அடி எடுத்து வைத்தது தமிழ் படத்தின் மூலம் தான்.

vijay-priyankachopra-cinemapettai-01
vijay-priyankachopra-cinemapettai-01

2000ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு முதல் முதலாக தமிழ் சினிமாவில் அதுவும் விஜய்யுடன் தான் அறிமுகமானார். அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்றவர் தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும்போது தன்னுடைய முதல் பட ஹீரோவான தளபதி விஜய் பற்றி பெருமையாக பேசி உள்ளார். விஜய் அன்று ஏற்படுத்திய தாக்கத்தை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழன் படப்பிடிப்பின் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படும் போது கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கு மேலாக ரசிகர்கள் விஜய்யை சந்திக்க காத்துக் கொண்டிருப்பார்களாம். படப்பிடிப்பு முடிந்த பிறகு எவ்வளவு லேட்டானாலும் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு தான் விஜய் ஹோட்டல் அறைக்கு செல்வாராம்.

ரசிகர்களை மதிக்கும் விஜய்யின் குணம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் குறிப்பிட்டுள்ளார். அன்றிலிருந்து இன்றுவரை என்னுடைய ரசிகர்களை மதிக்கத் தவறியது இல்லை என குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.

Trending News