வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்.. காசுக்காக மட்டும்தான் நடிப்பேன் என மறுத்த இளம் நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் மும்பையில் நடந்து கொண்டிருக்கிறது. அண்ணாத்தே திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்தின் இந்த படத்தையும் தயாரிக்கிறார்கள். கோலமாவு கோகிலா, டாக்டர் பட இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தை இயக்குகிறார்.

கடந்த மாதம் சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தது. ரஜினி அந்த போஸ்டரில் செம மாஸாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்தார். அதனை தொடர்ந்து இந்த படத்தின் ஒரு புகைப்படம் லீக்கானது. அதில் ரஜினி கசங்கிய சட்டையுடன் தெருவில் நடந்து போவது போல காட்சி இருந்தது.

Also Read:  ரஜினியை பாடாய்ப் படுத்தும் நெல்சன்.. பரபரப்பை கிளப்பிய ஜெயிலர் ஷூட்டிங்

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்து இருந்தது. தமன்னா சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில் பிரியங்கா மோகனும் இருப்பதாக சொல்கின்றனர்.

பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் முதன் முதலில் கன்னட படம் மூலமாக தான் அறிமுகமானார். தமிழில் டாக்டர் படத்தில் முதலில் நடித்த பிரியங்காக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்தார்.

Also Read: ரஜினியை அலற விடப்போகும் ஜெய்.. நெல்சன் கொடுத்த புதிய தைரியம்

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது என்றால் நடிகர் நடிகைகளுக்கு மிகப்பெரிய கனவு. ஆனால் பிரியங்கா மோகன் ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஈசியாக தட்டி விட்டிருக்கிறார். நெல்சன் ரஜினிக்கு பிரியங்கா மோகனை ஜோடியாக நடிக்க வைக்க கேட்ட போது அவர் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆனால் பிரியங்கா ரஜினி படத்தில் நடிக்க ஒரு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டு இருக்கிறார். ரஜினி படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட ஹீரோயின் இவராக தான் இருக்கும். மேலும் தனக்கு 6 தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து இருப்பதாகவும் பேசிய சம்பளம் தருவதாக இருந்தால் நான் நடிக்கிறேன் இல்லையென்றால் வேறு ஹீரோயினை பார்த்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.

Also Read: ஜெயிலர் படத்தின் கதை இதுதான்.. மீண்டும் கேலிக்கூத்துக்கு உள்ளான நெல்சன்

Trending News