ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ரோஜா 2 சீரியலில் மதி, மலராக கலக்க வரும் பிரியங்கா நியாஸ்.. இரட்டை ரோஜாவாக என்டரி கொடுக்கும் ஹரிப்பிரியா

Sun Tv: சீரியல் என்றால் சன் டிவி தான் என்று தாத்தா பாட்டி காலத்தில் இருந்து இப்பொழுது வரை முதல் இடத்தை தக்க வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் சேனல் தரப்பில் இருந்து அதிக மெனக்கெடு செய்வது தான். அந்த வகையில் அவ்வப்போது புது புது சீரியல்களை கொண்டு வந்து மக்களை கவர்ந்து கொண்டே வருகிறார்கள்.

தற்போது அனைவரது ஃபேவரிட் சீரியலாக இடம் பிடித்த இரண்டு சீரியல்களின் இரண்டாம் பாகம் வரப்போகிறது. அதில் ஒன்று எதிர்நீச்சல், இன்னொரு சீரியல் ரோஜா. ஆனால் ரோஜா சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்த பிரியங்கா நல்காரி தான் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஆனால் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சிப்பு சூரியனுக்கு பதிலாக தற்போது மூன்று முடிச்சு சீரியலில் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நியாஸ் கான் தான் ரோஜா இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார்.

ஏற்கனவே மூன்று முடிச்சு சீரியல் மூலம் சூர்யா, மக்கள் மனதை கொள்ளை அடித்து விட்டார். அந்த வகையில் ரோஜா கதாபாத்திரத்தில் அர்ஜுன் கேரக்டர் மூலமாகவும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ரோஜா இரண்டாம் பாகத்தில் இரண்டு ரோஜாக்கள் சேர்ந்து கலக்கப்போவதாக தற்போது தகவல் வெளியாயிருக்கிறது. அந்த வகையில் பிரியங்கா நல்காரி உடன் சேர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஹரிப்பிரியாவும் நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார்.

இவரும் ரோஜா இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களை என்டர்டைன்மென்ட் பண்ண போகிறார். ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து நக்கல் ராணியாக கலக்கிய ஹரிப்பிரியா, ரோஜா இரண்டாம் பாகத்திலும் அவருக்கான முக்கியத்துவத்தை பிடித்து விடுவார். ஆக மொத்தத்தில் ரோஜா 2 எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை அடையப்போகிறது.

- Advertisement -

Trending News