வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பாசத்தை பகடைக்காயாக உபயோகிக்கும் பிரியங்கா.. மோசமான யுக்தியால் எரிச்சலடையும் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு தனி யுக்தியை வைத்து விளையாடி வருகின்றனர். அதில் பவானி, அக்ஷரா போன்றோர் தங்களுக்கு எதுக்கு வம்பு என்று சில விஷயங்களில் ஒதுங்கி இருக்கின்றனர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் ஒற்றை ஆளாக நின்று சமாளித்து வருகிறார் பிரியங்கா. ஒருவகையில் இது சாமர்த்தியமாக இருந்தாலும் தற்போது பிரியங்காவின் இந்த செயல்கள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் விவாதம் ஆகியுள்ளது.

அதாவது பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் தனக்கு சரியாக வருபவர்களை மட்டும் தன்னுடன் வைத்துக் கொள்கிறார். நட்பு என்ற பெயரில் நிரூப் மற்றும் அபிஷேக் இருவரையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார். பிரியங்காவுக்கு யாருடனாவது வாக்குவாதமோ, சண்டையோ ஏற்பட்டால் அடுத்த சில நொடிகளிலேயே அவர்களுக்கு ஒரு முத்தத்தை கொடுத்து சமாதானப்படுத்துகிறார். இதன் மூலம் எனக்கு பகையுணர்வு இல்லை என்று காட்ட முயற்சிக்கிறார்.

ஆனால் இந்த கோபத்தை எல்லாம் அவர் மனதில் வைத்துக் கொண்டு வேறு ஒரு தருணத்தில் தக்க சமயம் பார்த்து திருப்பி கொடுத்து விடுகிறார். அதற்கு எதிர்ப்பு வந்தால் உடனே கட்டியணைத்து அவர்களை திசை திருப்பி விடுகிறார். நான் மனதில் எதையும் வைத்துக் கொள்ளவில்லை என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு உணர்த்தி விடுகிறார்.

பொதுவாக நாம் நண்பர்களுடனோ அல்லது உறவுகளுடனோ சண்டை போட்டால் அதை சரி செய்வதற்கு சிறிது காலம் எடுத்துக் கொள்வோம். ஆனால் வெறும் 50 நாட்கள் பழகிய ஒருவரோடு சண்டை போட்டு விட்டு உடனே எப்படி பிரியங்காவால் சமாதானமாக முடிகிறது. இதெல்லாம் விளையாட்டின் ஒரு யுக்தி என்று அறிந்துகொண்ட போட்டியாளர்கள் சரியாக ஒதுங்கி விடுகின்றனர். தாமரை போன்ற சிலர் பிரியங்காவின் இந்த விளையாட்டுக்கு பலியாகி விடுகின்றனர்.

தாமரையின் பலவீனத்தை நன்கு அறிந்து கொண்ட பிரியங்கா அவரை வெறுப்பேற்றி பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறார். இதுதான் நேற்றைய நிகழ்ச்சியிலும் நடந்தது.பிரியங்கா நினைத்தது போலவே வாய்விட்டு மாட்டிக் கொண்டார் தாமரை. இவ்வளவு சண்டையிலும் பிரியங்கா கூலாக சென்று அமர்ந்து கொண்டார் ஆனால் ஒன்றும் புரியாத தாமரையோ கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த பிரியங்கா எந்த சமாதானமும் கூறாமல் தாமரை கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

இதனால் தாமரை இன்னும் குழப்பம் அடைவார், அது அவருக்கு மேலும் பலவீனத்தை உண்டாக்கும். இதன் எதிரொலி அடுத்து வரும் டாஸ்க்கில் தெரிய ஆரம்பிக்கும். இதன் மூலம் ஒருவரை மனதால் சோர்வடைய செய்து ஈசியாக வெளியேற்றி விடலாம் என்பதே பிரியங்காவின் திட்டம். இது பிக்பாஸ் போன்ற விளையாட்டிற்கு சரிப்பட்டு வந்தாலும் பார்க்கும் மக்களுக்கு எரிச்சலையே தருகிறது.

Trending News