வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

கவினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் என்ன பிரச்சனை? அமரனால் தான் ப்ளடி பக்கர் ப்ளாப்பா?

தமிழ் சினிமாவில் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் வந்து நடிகர்களாகவும், கலைஞர்களாகவும், தொழில் நுட்பக் கலைஞர்களாகவும் ஜொலித்திருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து சாதித்தவர்கள் குறைவானோர்தான். அதில், சிவகார்த்திகேயன், கவின், போஸ் வெங்கட் , சஞ்சீவ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து சாதித்த சிவகார்த்திகேயன் அவரது மெரினா, 3 ஆகிய படங்களில் நடித்த பின், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம்தான் அதிகம் கவனிக்கப்பட்டார். அதன்பின், காக்கிச் சட்டை, அயலான், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஹூரோக்களில் முதலிடத்தில் உள்ளார்.

அதேபோல், கவினும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரில் நடித்து, டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன்பின், அவர் லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், டாடா படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்து, நடிகராக அடையாளப்படுத்தியது.

எனவே கவினும் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஸ்டார் படம் அவருக்குப் பெரிதாகப் போகவில்லை. எனவே நெல்சன் தயாரித்திருந்த பிளடி பக்கர் படத்தை நம்பியிருந்தார். இப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான நிலையில், இதே நாளில்தான் சிவகார்த்திகேயனின் அமரன் படமும் வெளியானது.

இவ்விரு படங்களில் பிளடி பக்கர் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் அமரன் படம் ரூ.250 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே, சிவாவும், நெல்சனும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர். அடித்து புதிதாகவும் ஒரு படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

அமரன் படத்தால் ப்ளடி பக்கர் ப்ளாப்பா?

அப்படியிருக்கும்போது, நெல்சனின் முதல் தயாரிப்பான ப்ளடி பக்கர் ரிலிஸாகும் அதே நாளில் பெரிய பட்ஜெட் படமான அமரன் படத்தை ஏன் சிவா ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் அமரன் ரிலீசானதால்தான் ப்ளடி பக்கர் தோல்விடைந்ததாகவும் இதனால் சிவாவுக்கும், கவினுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்ததால்தால் இருவரும் சமரசமின்றி ஒரே நாளில் படங்களை ரிலீஸ் செய்ததாகவும், சிவாவுக்கு எதிராக கவினை வளர்த்துவிடுவற்காகவே நெல்சன் படத்தை ரிலீஸ் செய்ததாக இப்படி பல ரக ரகமாக டிசைன் டிசைனாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

அமரன், ப்ளடி பக்கர் ஒரே நாளில் ரிலீஸ் ஏன்?

ஆனால், சினிமா விமர்சகர்கள், ‘இதெல்லாம் ஒரு காரணமும் இல்லை. தயாரிப்பாளர்கள் தங்களுக்கு ஏற்ற நாட்களில் ரிலீஸ் செய்வதுதான் வழக்கம், அதே தான் சிவா, கவின் படங்களிலும் நடந்துள்ளது. அதேசமயம், அமரன், ப்ளடி பக்கர் இவ்விரு படங்களும் ரிலீஸ் என்றால் பெரும்பாலான தியேட்டர்களில் இவ்விரு படங்களே ஆக்கிரமிக்கும் மற்ற படங்கள் திரையிட வாய்ப்பிருக்காது என்பதாலும் ஒரே நாளில் இப்படங்கள் ரிலீஸாகியிருக்கும்’ என்று தெரிவித்துள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News