Vijay In Goat: இந்த வருடத்தில் மீதம் இருக்கும் ஆறு மாசத்தில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆக வரிசைகட்டி காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படமும் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆவதற்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
இதில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளி வந்திருக்கிறது. ஆனால் எப்பொழுதும் போல விஜய் பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பை இதில் பார்க்க முடியவில்லை. மேலும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வந்தது.
கோட் படத்தை ரிலீஸ் பண்ணுவதில் ஏற்பட்ட குழப்பங்கள்
இதனை அடுத்து படம் ரிலீஸ் ஆவதற்குள் மூன்றாவது பாடல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோட் படத்தை சொன்னபடி செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் பண்ண முடியுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது முதல் பாதிக்கான வேலைகள் மட்டும் தான் முடிந்திருக்கிறது. இன்னும் ஏகப்பட்ட வேலைகள் மிச்சமாக இருக்கிறது. அதிலும் யுவனின் ரெக்கார்டிங் ஒர்க் பாக்கியிருக்கிறது.
அந்த வகையில் போஸ்ட் புரொடக்ஷன், எடிட்டிங் மற்றும் பேட்ச் வேலைகளும் அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்தலாம் என்று முடிவு பண்ணி வைத்திருக்கிறார்கள். அதனால் ஒரு பக்கம் அனைவரும் அந்த வேலையில் பிஸியாக இருக்கிறார்கள். இப்படி அங்கங்கே பாதி வேலைகள் பெண்டிங் ஆக இருப்பதால் கோட் படம் தற்போது சிக்கலில் தவித்து வருகிறது.
ஏனென்றால் வெளிநாட்டில் கோட் படத்தை ரிலீஸ் பண்ண வேண்டும் என்றால் ரிலீஸ் தேதியில் இருந்து 20 நாளைக்கு முன்னாடி அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சென்சார் வாங்கி இருக்கணும். அப்பொழுதுதான் வெளிநாட்டில் இப்படத்தை ரிலீஸ் பண்ண முடியும். அந்த வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் எல்லா வேலைகளையும் முடித்து அனுப்பினால் மட்டும்தான் ரிலீஸ் பண்ணுவதில் பிரச்சனை வராமல் தடுக்க முடியும்.
இதற்கிடையில் விஜய் முதல் பாதியை பார்த்துவிட்டு படம் சூப்பர் நன்றாக வந்திருக்கிறது தெறிக்க விட்டிருக்கிறீர்கள் என்று வெங்கட் பிரபுவை புகழ்ந்து தள்ளி கிளம்பிவிட்டார். ஆனால் இரண்டாம் பாதியில் பெண்டிங் வேலைகள் அதிகமாக இருப்பதை கவனிக்காமல் வெங்கட் பிரபு டீமை நம்பியதால் விஜய்க்கு மிகப்பெரிய தலைவலியாக கோட் ரிலீஸ் பிரச்சனையை சந்திக்க போகிறது.
இதையெல்லாம் தாண்டி விஜய் படத்தை பார்ப்பதற்கும், இதற்கு அடுத்து தொடர்ந்து தளபதி நடிக்க மாட்டார் என்ற காரணத்திற்காகவும் கோட் படத்தை ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற அனைத்து பக்கங்களிலும் விஜய்யின் கோட் படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள்.
கோட் படத்தை பற்றி சுவாரசியமான தகவல்கள்
- வாயை பிளக்க வைத்த GOAT டிஜிட்டல், தியேட்டர் உரிமை விற்பனை
- ஒரே மேடை பேச்சால் முடிந்து போன GOAT படத்தின் AI டெக்னாலஜி
- அஜித்திடம் சென்ற GOAT பட தயாரிப்பாளர்