சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விமலுடன் ஒரே ஒரு படம்.. நடுத் தெருவுக்கு வந்ததாக புலம்பும் தயாரிப்பாளர்

நடிகர் விமல் ஒரு காலத்தில் மினிமம் கியாரண்டி நடிகராக வலம் வந்தாலும் சமீபகாலமாக அவரது படங்கள் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகின்றன. இதனால் அவரது படத்தை தயாரிக்க உதவி செய்தவர் நடுரோட்டில் நிற்பதாக புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசங்க, களவாணி என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் விமல். கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் வரை அவரது மார்க்கெட் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் நடித்ததால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது போல. தொடர்ந்த அவரது படங்களை புறக்கணித்தனர். ஒரு கட்டத்தில் விமல் நடிக்கும் படங்கள் அனைத்தும் வாரவாரம் வெளியாகிக் கொண்டிருந்தது.

சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தற்போது கைவசம் படங்கள் வைத்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி அவரது மார்க்கெட் இல்லை என்பதுதான் உண்மை.

கடைசியாக விமல் மன்னர் வகையரா படத்தை சொந்தமாக தயாரித்தார். இந்த படத்திற்காக ஒருவரிடம் 50 லட்சம் கடன் வாங்கினாராம். அவரும் வீட்டுப் பத்திரத்தை வைத்து 50 லட்சம் கடன் கொடுத்துள்ளார். கடன் வாங்கிய பிறகு விமல் கொடுத்த காசோலையில் பணம் இல்லையாம். இதனால் கடன் கொடுத்தவரின் வீடு ஜப்தி ஆகும் நிலைக்கு வந்தும் விமல் அதை கண்டுகொள்ளவில்லை என்கிறார்.

vimal-cinemapettai
vimal-cinemapettai

இதனால் விமல் தன்னுடைய மனைவியுடன் திமுக கட்சியில் இணைய இருந்த இந்த நேரத்தில் நேரடியாக பணம் கொடுத்து உதவியவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி விட்டாராம். இதனால் விமல் தரப்பிலிருந்து ஏதாவது பதில் கிடைக்குமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

Trending News