நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது.
கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.
தொடர்ந்து சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் . அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
தயாரிப்பாளர்களை கதற விடும் நயன்
நடிகைகளுக்கு திருமணமானாலே சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள் என்ற விதி காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உடைத்து திருமணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என தற்கால நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார் நயன்தாரா. என்னதான் நடிகையாக இருந்தாலும், சிறந்த அம்மாவாகவும் தனது கடமைகளை செய்து வருகிறார்.
குழந்தைகளை தனியாக விட்டு எங்கேயும் செல்லமாட்டார். தன் கூடவே குழந்தைகளையும் அழைத்து செல்வார். நயன்தாரா நடிக்கும் நேரத்தில், அவரது அஸிஸ்டண்ட்ஸ் அந்த குழந்தைகளை பார்த்து கொள்வாராம். இது பாராட்டக்கூடிய ஒரு விஷயம் தான். ஆனால் ஷூட்டிங்கில் குழந்தைகளை வைத்திருக்கும்போது, அந்த குழந்தைகளுக்கான செலவை தான் தானே செய்யவேண்டும். ஆனால், அதையும் தயாரிப்பு நிறுவனமே செய்கிறது என்று குற்றச்சாட்டுகளை பல தயாரிப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.

தனது குழந்தைகளையும், அந்த குழந்தைகளை பார்த்துக்கொள்ள அஸிஸ்டண்ட்ஸை தன்னுடன் அழைத்து வரும்போது, தான் தானே அதற்கான செலவை செய்யவேண்டும். ஆனால் அந்த செலவையும் தயாரிப்பாளர்கள் தலையில் கட்டுவதெல்லாம் அநியாயமாக இல்லையா? இந்த காரணத்தினாலே, பல தயாரிப்பாளர்கள் இவரை பார்த்ததும் தெறித்து ஓடுகின்றனர்.