புதன்கிழமை, ஜனவரி 8, 2025

அஜித்தின் அம்மா மருத்துவ செலவுக்கு உதவாத தயாரிப்பாளர்.. பழசை மறக்காத ஏகே

Actor Ajith: அஜித்தை பொறுத்தவரையில் வெளியில் கோபக்காரராக தெரிந்தாலும் தன்னிடம் உதவி என்று கேட்பவருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யக்கூடியவர் தான். இதை பல பிரபலங்கள் பேட்டியில் கூறி இருக்கிறார்கள். இதற்கு காரணம் அஜித் ஆரம்பத்தில் மிகுந்த பண நெருக்கடியில் இருந்து அவமானத்தை சந்தித்து இருந்தார்.

அப்படி தன்னுடைய அம்மாவின் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் ஒரு நிலை ஏற்பட்டு இருக்கின்றது. அதாவது விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்த படம் தான் ராஜாவின் பார்வையிலே. அப்போது விஜய் வளர்ந்த நடிகராக இருந்த நிலையில் அஜித் மிகவும் சாதாரண நடிகராக தான் இருந்தார்.

Also Read : மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள்.. அட இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கு

மேலும் அந்த படத்திற்கு விஜய்க்கு 50,000 அட்வான்ஸ் தொகை கொடுத்த நிலையில் அஜித்துக்கு 20,000 கொடுத்திருந்தார்கள். இந்த சூழலில் தான் அஜித்தின் தாயாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அப்போது அவரிடமும் பணம் பற்றாக்குறை இருந்ததால் தயாரிப்பாளரை நாடி இருந்துள்ளார்.

அப்போது தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லி அம்மாவின் மருத்துவ செலவிற்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது ஐந்தாயிரம் ரூபாய் கொடுங்கள் அதன் பிறகு சம்பளத்தில் கழித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டிருக்கிறார் அஜித். ஆனால் தயாரிப்பாளர் அதை கொஞ்சமும் காதில் வாங்காமல் அலட்சியப்படுத்தி விட்டாராம்.

Also Read : LCU இல்லாத புதிய கூட்டணி.. அஜித்திற்கு வலை வீசும் சூப்பர் ஸ்டார்

அதன் பிறகு யாரிடம் சென்று பணம் வாங்குவது என்று தெரியாமல் அந்த ஆபிஸில் உள்ள ஒருவரிடம் அழுது கொண்டு பேசி இருந்தாராம். இதைத்தொடர்ந்து அஜித்தை ரொம்ப அளக்களித்து அழ வைத்த பிறகுதான் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தாராம். அதன் பிறகு மீதி சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டாராம்.

அந்த விஷயத்தை இன்று வரை அஜித்தால் மறக்க முடியாமல் மனதிலேயே வைத்து கொண்டிருக்கிறாராம். அன்று தன்னை தூக்கி எறிந்த தயாரிப்பாளரை கண்டிப்பாக ஜெயிப்பேன் என்று சபதம் போட்டிருந்தார். பழசை மறக்காமல் அஜித் அதில் ஜெயித்துக் காட்டி விட்டார்.

Also Read : ஷாலினியை அப்படியே உரித்து வைத்திருக்கும் அஜித்தின் மகள்.. இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோ

Trending News