Actor Simbu: நடிகர் சிம்பு ரீ என்ட்ரிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெற்று, மிகப்பெரிய வெற்றி அடைவார் என்பது அவருடைய ரசிகர்களின் கனவாக இருந்தது. அதற்கேற்றவாறு சிம்புவுக்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என வெற்றி படங்கள் அமைந்ததோடு, உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.
லண்டன் சென்று இருந்த சிம்பு இந்தியா திரும்பி விட்டதாகவும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவருடைய 48வது படத்தின் வேலைகள் அடுத்தடுத்து ஆரம்பிக்க இருப்பதாகவும் நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் மொத்தமாய் சிம்புவின் பிளானில் மண்ணை வாரி போடும் அளவுக்கு தயாரிப்பு கவுன்சிலில் இருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
Also Read:5 டாப் நடிகர்களுக்கு ரெட் கார்ட்.. சேட்டையை ஓரம் கட்டினாலும் சிம்புவை விடாமல் துரத்தும் பிரச்சனை
நடிகர் சிம்புவோடு சேர்த்து மொத்தம் ஐந்து நடிகர்களுக்கு தயாரிப்பாளர் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீசுக்கு தக்க பதில் கொடுக்கவில்லை என்றால் அந்த நடிகர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. சிம்பு நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ரெட் கார்ட் போன்ற தகவல்கள் வெளியாகி இருப்பது அவருடைய கேரியருக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமைந்திருக்கிறது.
சிம்புவின் மீது புகார் கொடுத்து இருப்பவர் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான இவர், ஏற்கனவே சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலம் பல கோடிகள் லாபம் பார்த்தவர். இந்த படம் முடிந்த கையோடு இவருடைய நிறுவனத்திற்கே சிம்பு அடுத்து மூன்று படங்களை பண்ணி தருவதாக ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது இதுதான் மிகப்பெரிய சிக்கலுக்கு காரணம்.
இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு சிம்புவிடம் சொல்லப்பட்ட முதல் கதையே கொரோனா குமார் தான். அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்திருக்கும் சிம்பு இந்த கதையை கேட்ட பிறகு, கொரோனா என்பது கொஞ்சம் பழைய ட்ரெண்ட் ஆகிவிட்டதால் படத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கு இயக்குனர் தரப்பு ஒத்துப்போகவில்லையாம். இதனால் தான் சிம்பு இந்த படத்தில் நடிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்திருக்கிறார்.
வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சிம்பு அடுத்தடுத்து ஹிட் கொடுக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் சொல்லும் கதையில் நியாயமாக ஒரு சில மாற்றங்களை சொன்னதை ஏற்காமல் இந்த படத்தின் நடித்தே ஆக வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுப்பது மட்டுமில்லாமல், ரெட் கார்டு வரை செல்வதெல்லாம் நியாயமற்றதாகவே இருக்கிறது.
Also Read:இளம் நடிகையுடன் டேட்டிங் செய்யும் சிம்பு.. அம்பலத்திற்கு வந்த ரகசிய உறவு