சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

2 குழந்தைகளுடன் நடு ரோட்டில் நின்ற சிம்ரன்.. கலைப்புலி தாணு பகிர்ந்த விஷயம்!

Simran: 90களின் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் புகழின் உச்சியில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை சிம்ரன்.

விஜய், அஜித், கமலஹாசன், விஜயகாந்த், அர்ஜுன், முரளி என அப்போதைய டாப் ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்து விட்டார்.

ரஜினியுடன் ஜோடி சேரவில்லையே என்ற அவருடைய ரசிகர்களின் இயக்கத்தையும் பேட்ட படத்தின் மூலம் தீர்த்து வைத்தார்.

சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சிம்ரன் பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு சிம்ரன் லண்டனில் ஒரு ஹோட்டலில் குழந்தைகளுடன் தங்கியிருந்திருக்கிறார்.

திடீரென அந்த ஹோட்டல் நிர்வாகம் சிம்ரன் தங்கி இருக்க வேண்டிய காலக்கெடு முடிந்து விட்டதாக சொல்லி ஹோட்டலை காலி செய்யச் சொல்லி இருக்கிறார்கள்.

ஹோட்டலில் இருந்து வெளியே வந்த சிம்ரன் என்ன செய்வது என்று தெரியாமல் கலைப்புலி தாணுவுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கிறார்.

உடனே தாணு தன்னுடைய நண்பர் மூலம் சிம்ரனுக்கு தங்க ஏற்பாடுகள் செய்து கொடுத்ததாக அந்த விருது விழாவில் பகிர்ந்திருக்கிறார்.

Trending News