வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

எனக்கு 1000 கோடி வசூல் முக்கியம் இல்ல.. தயாரிப்பாளரை கதிகலங்க வைத்த லோகேஷ்

லியோ படம் எப்படியும் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்ற நம்பிக்கையில் படத்தின் தயாரிப்பாளர் லலித் இருக்கிறார். சினிமா விமர்சகர்கள் பலரும் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடிக்கும் என்று கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் லோகேஷ் கூறியிருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

லியோ பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்து வரும் லோகேஷ் தனக்கு ஆயிரம் கோடி வசூல் எல்லாம் முக்கியமில்லை என்று கூறி இருக்கிறார். என்னை பொருத்தவரையில் 150 ரூபாய் கொடுத்தவரும் மக்களை எவ்வாறு என்டர்டைன்மென்ட் செய்ய முடியும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது.

மேலும் படத்தின் கலெக்ஷனை பற்றி எப்போதுமே எனக்கு எந்த எண்ணமும் வந்தது கிடையாது. ரசிகர்கள் ஒரு படத்தை நேரம் செலவிட்ட பார்க்கிறார்கள் என்றால் அவர்களை எவ்வாறு திருப்தி படுத்த முடியும் என்பதை மட்டும் தான் இயக்குனர்கள் பார்க்க வேண்டும். அந்த வகையில் லியோ படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும்.

அதுவும் முதல் 10 நிமிடங்கள் ரசிகர்கள் மிஸ் பண்ணி விட வேண்டாம் என்றும் லோகேஷ் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் அந்த காட்சி கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடும் படியாக எடுக்கப்பட்டுள்ளதாம். அதோடு மட்டுமல்லாமல் இவர் சொல்லும் ஒவ்வொரு அப்டேட்டும் படத்தை பார்க்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வசூலை பற்றி தனக்கு கவலை இல்லை என்று லோகேஷ் கூறியது தயாரிப்பாளரை கதி கலங்க செய்து இருக்கிறது. ஏனென்றால் விஜய் படம் என்பதால் மிகப்பெரிய பட்ஜெட் போட்டதால் படத்தை எடுத்திருக்கிறார். அதிலும் விஜய்யின் சம்பளமே பட்ஜெட்டில் பாதியாக அமைந்திருக்கிறது.

இந்த சூழலில் லோகேஷ் இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனாலும் லோகேஷ் ஒவ்வொரு எடுக்கும்போது முந்தைய படத்தை விட அபரிவிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறார். அந்த அளவுக்கு லியோ படத்தையும் சோடை போக விடமாட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News